‘பிறந்த’ குழந்தைக்கு... ‘ஆபரேஷன்’ தியேட்டருக்கு உள்ளேயே நடந்த ‘உறையவைக்கும்’ சம்பவம்... அலறித் ‘துடித்த’ தந்தை...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தனியார் மருத்துவமனைக்குள் புகுந்த தெரு நாய் ஒன்று பச்சிளம் குழந்தையைக் கடித்துக் கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரைச் சேர்ந்த தம்பதி ரவிக்குமார் - கஞ்சன். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கஞ்சன் நேற்று பிரசவத்திற்காக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து கஞ்சனை அறைக்கு அழைத்துச் சென்று படுக்கையில் படுக்க வைத்துள்ளனர். அப்போது அங்கு ஓடிவந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் தெரு நாய் ஒன்று அறுவை சிகிச்சை அரங்கிற்குள் நுழைந்துவிட்டதாகக் கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரவிக்குமார் அங்கு ஓடிச் சென்று பார்த்தபோது, குழந்தை நாய் கடித்ததில் படுகாயங்களுடன் இருந்துள்ளது.

அதைப் பார்த்து ரவிக்குமார் அலற, அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள் நாயை விரட்டியுள்ளனர். பின்னர் குழந்தையைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரவிக்குமார் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் தனியார் மருத்துவனை உரிமையாளர் மற்றும் அதன் ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த மருத்துவமனை உரிய ஆவணங்கள் இன்றி நடத்தப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு சீல் வைத்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

UTTARPRADESH, BABY, DOG, PRIVATEHOSPITAL, FATHER, OPERATION, THEATRE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்