தளும்ப தளும்ப ரூ.80 ஆயிரத்துக்கு பெட்ரோல் போட்டுட்டு சொகுசுக்காரில் வந்து 1000 ரூபாய் திருடிய கும்பல்.. அதுக்கு அப்றம் போலீஸிடம் சொன்ன விஷயம்தான்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்திலிருந்து சொகுசு காரில் கொள்ளையடிக்க சென்னைக்கு வந்த கும்பலை சேர்ந்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர். அவர்களிடத்தில் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "எப்புட்றா விக்கெட்டை பறிகொடுக்கலாம்னு கிரவுண்ட்க்கு வராங்க".. - ஹர்பஜன் சிங்..!
சென்னையில் உள்ள நீலாங்கரை பகுதியில் ஏராளமான தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரபலங்களின் வீடுகள் அமைந்திருக்கின்றன. இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் 6 ஆம் தேதி நீலாங்கரையில் உள்ள ஒரு வீட்டிற்குள் இந்த கும்பல் நுழைந்திருக்கிறது. அப்போது உள்ளே இருந்த காவலாளி கூச்சலிட்டதால் அங்கிருந்து தப்பி சென்று இருக்கின்றனர். அதன் பிறகு சுல்தான் என்பவரது வீட்டிற்குள் சென்ற இந்த கும்பல் ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சில காலனிகளை திருடிச் சென்றுள்ளனர்.
கொள்ளை முயற்சி நடந்தது குறித்து சுல்தான் நீலாங்கரை காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். இதனை அடுத்து சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணையில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். தற்போது கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் உத்திர பிரேதசம் மாநிலத்தில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது என்பதும் அந்த காரின் உரிமையாளர் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
அப்போது, காரின் உரிமையாளரான தனபால் சிங் கொடுத்த தகவலின் படி இந்த கொள்ளை சம்பவத்தில் புனித் குமார், ராஜேஷ்குமார் யாதவ், இர்பான் மற்றும் சுனில் குமார் யாதவ் ஆகியோர் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது. இதனை தொடர்ந்து உத்திர பிரதேசம் சென்று பதுங்கி இருந்த சுனில் குமாரின் சகோதரர் ராஜேஷ் குமார் மற்றும் புனித குமாரை தமிழக காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய இர்பான் மற்றும் சுனில் குமாரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் உத்தர பிரதேசத்தில் இருந்து சொகுசு காரில் வரும்போது 80000 ஆயிரம் ரூபாயை பெட்ரோலுக்காக செலவழித்ததாகவும், கொள்ளையடித்து செல்லும் பொருட்களை ஏழை மக்களுக்கு தானமாக வழங்கி வருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் இர்பான் மற்றும் சுனில் குமார் இருவரையும் பிடிக்கும் பணியில் காவல் துறையினர் இறங்கியுள்ளனர். இந்த சம்பவம் சென்னை முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்ஸ்டா தோழிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்.. இளைஞர் போட்ட பிளான்.. கையோட கூட்டிட்டு போன போலீஸ்..!
- "ரொம்ப நன்றிங்க.. மீட்டுக் கொடுத்துட்டீங்க.!".. உணர்ச்சிப்பெருக்கில் காவல் ஆணையர் காலில் விழுந்த நடிகர் போண்டாமணி.!
- ஒரே அசதி... திருடப்போன இடத்துல தூக்கம் போட்ட ஆசாமி.. எழுப்பி கூட்டிட்டுப்போன போலீஸ்.. யாரு சாமி இவரு..!
- கல்யாணம் முடிச்சு ரயில் ஏறிய புதுமண தம்பதி.. பாதியிலேயே மணமகள் போட்ட பக்கா பிளான்.. கலங்கிப்போன மாப்பிள்ளை..!
- ஒரு வாரமா வீட்டுக்குள்ள இருந்து துர்நாற்றம்.. லிவிங் டுகெதரில் இருந்த வாலிபர் செஞ்ச பயங்கரம்.. விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்கள்..!
- லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண் மாயம்.. ஃபிரிட்ஜை திறந்தபோது திகைச்சு நின்ன போலீஸ்.. ஷ்ரத்தா வழக்கை போலவே நடந்த அடுத்த பயங்கரம்..!
- காதலிக்கு 'காதலர் தின' GIFT கொடுக்க இளைஞர் செய்த தகிடுதத்தம்.. கையோடு போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..!
- அதிக இதயத்துடிப்பு பிரச்சனையுடன் வந்த நோயாளி... ‘ரேடியோ அதிர்வெண் அகற்றல்’ மூலம் குணப்படுத்திய காவேரி மருத்துவமனை..!
- "நான் கேட்டது ரூ.8000.. மிஷின் கொடுத்தது ரூ.20 ஆயிரம்".. அள்ளிக்கொடுத்த ATM.. ஆடிப்போன நபர்.. வீடியோ..!
- பல கனவுகளோட நடந்த திருமணம்.. 3 வது நாளில் மணமகனுக்கு நேர்ந்த சோகம்.. உறைந்துபோன குடும்பத்தினர்..!