கல்யாண கொண்டாட்டம்.. நடனமாடும் போது திடீர்னு சரிஞ்சு விழுந்த நபர்.. துடித்துப்போன உறவினர்கள்.. கலங்க வைக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திர பிரதேச மாநிலத்தில் திருமணத்தின் போது நடனமாடிய நபர் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | கல்லூரிக்குள் புகுந்த வடமாநில தொழிலாளர்கள்.. பதறிப்போன மாணவிகள்.. கோவையில் பரபரப்பு..!

மருத்துவ உலகில் பல்வேறு உயரங்களை மனித குலம் அடைந்திருந்த போதிலும், சில எதிர்பாராத சோக சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இளம் வயது மனிதர்களிடையே மாரடைப்பு ஏற்படுவது சமீப காலங்களில் அதிகரித்திருப்பதை நாம் தொடர்ந்து செய்திகள் வழியாக அறிந்து வருகிறோம். திடீரென கடினமான உடற்பயிற்சி போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு மாரடைப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்தும் வருகின்றனர். அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் சோக சம்பவம் ஒன்று நடைபெற்று இருக்கிறது. இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருவதுடன் பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்ற திருமணத்தில் தான் இந்த துயர சம்பவம் நடந்ததாக தெரிகிறது. அந்த வீடியோவில் திருமணத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட இடத்தில் விருந்தினர்கள் நடனமாடுகின்றனர். அப்போது நடனமாடிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுகிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அவரை எழுப்ப முயற்சி செய்திருக்கின்றனர்.

ஆனால், அந்த முயற்சிகள் பலனிக்காததால் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்.

இது தொடர்பாக வெளியான தகவலின்படி மரணமடைந்த அந்த அந்த நபர் மருந்து பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்தார் எனவும் அவருடைய மனைவியின் சகோதரி திருமணத்தில் கலந்துகொண்ட வேளையில் இந்த துயர சம்பவம் நடைபெற்றதாகவும் தெரிகிறது. திருமணத்தில் நடனமாடும்போது மயக்கமடைந்த நபர் உயிரிழந்த சம்பவம் உத்திர பிரதேச மாநில மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | தஞ்சாவூரு பையன்.. கஜகஸ்தான் பொண்ணு.. தமிழ் முறைப்படி நடந்த திருமணம்..!

UTTARPRADESH, MAN, DANCE, WEDDING FUNCTION, HOSPITAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்