‘சாமியாரின் ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி..’ கணவர் செய்த கொடூரம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப்பிரதேசத்தில் சாமியாரின் ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியை கணவர் நீரில் மூழ்கடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘சாமியாரின் ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி..’ கணவர் செய்த கொடூரம்..

அலிகார் பகுதியைச் சேர்ந்த மான்பால் சிங் என்பவருக்கு சாமியார் சந்தாஸ் என்பவருடன் சமீபத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக போதையில் இருந்தபோது உன் மனைவியை என்னுடன் உடலுறவு கொள்ள சம்மதிக்க வைத்தால் உன்னைப் பணக்காரனாக மாற்றிக் காட்டுகிறேன் என மான்பாலிடம் கூறியுள்ளார் அந்த சாமியார்.

இதனை நம்பிய மான்பால் மனைவி ரஜ்னியை இதற்காக தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். அவர் இதற்கு மறுப்பு தெரிவித்து தன்னுடைய சகோதரரிடம் கணவரைப் பற்றிக் கூறியுள்ளார். அவரும் மான்பாலை எச்சரித்துள்ளார். இந்நிலையில் கங்கை நதியில் பூஜை என்று சொல்லி அழைத்துச் சென்று ரஜ்னியை மான்பால் நீரில் மூழ்கடித்துக் கொன்று விட்டதாக அவர் சகோதரர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் கங்கை நதியில் தேடுதல் நடத்தி போலீஸார் ரஜ்னியின் சடலத்தை மீட்டுள்ளனர். இதுதொடர்பாக மான்பால் மற்றும் சாமியாரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சாமியார் ஹெராயின் வைத்திருந்த குற்றத்திற்காக ஏற்கெனவே தேடப்பட்டு வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

HUSBANDANDWIFE, TANTRIK, MURDER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்