கணவன் ‘சமைத்ததை’ வாயில் வைத்ததும்... அதிர்ந்துபோய் ‘தலைதெறிக்க’ ஓடிய ‘மனைவி’... உறைந்து நின்ற ‘போலீசார்’...
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப் பிரதேசத்தில் மனைவிக்காக சடலத்தின் உடல் பாகத்தை சமைத்து கொடுத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் வசித்து வரும் 32 வயதான நபர் ஒருவடைய மனைவி மளிகை பொருட்கள் வாங்குவதற்காக வார சந்தைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவர் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றபோது, அவருடைய கணவர் இரவு உணவை சமைத்துக்கொண்டிருந்துள்ளார். இதையடுத்து சமையல் முடிந்த பிறகு குடிபோதையில் இருந்த கணவருடன் அமர்ந்து அந்தப் பெண் சாப்பிடத் தொடங்கியுள்ளார். பின்னர் கணவர் சமைத்திருந்த அசைவ உணவை வாயில் வைத்த சில நொடியிலேயே அந்தப் பெண் வாந்தி எடுத்துள்ளார்.
அதன்பிறகு அந்த உணவை என்னவென்று பார்த்தபோது தான் அது சடலத்தின் கை என்பது தெரியவந்துள்ளது. அதைப் பார்த்து அதிர்ந்துபோன அந்தப் பெண் தலைதெறிக்க ஓடிச்சென்று அக்கம்பக்கத்தினரிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார். பின்னர் போலீசாருக்கும் இதுபற்றி தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டுக்குள் இருந்த கணவனை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில், மதுபோதையில் இருந்த அவர் கங்கை கரைக்கு சென்று அங்கு எரிக்கப்பட்ட பிணங்களிலிருந்து வேகாத கை ஒன்றை வீட்டுக்கு எடுத்து வந்து சமைத்ததாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோன போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திருமணம் செய்துவைத்த ‘நண்பனே’ செய்த கொடூரம்... தப்பித்த ‘6 மாத’ குழந்தை... இளம் ‘தம்பதிக்கு’ நேர்ந்த ‘நடுங்கவைக்கும்’ சம்பவம்...
- ‘கடைசியா அப்பாவோட முகத்தை பார்க்கணும்’... ‘உருக்கமாக கடிதம் எழுதிவைத்துவிட்டு’... ‘உயிரிழந்த தந்தையை பார்க்கச் சென்ற மகள்’... 'களேபரத்தால் நிறைவேறாத ஆசை'!
- 'மனைவியை சமாதானம் செய்ய... மாமனார் வீட்டுக்கு சென்ற கணவன்!'... வாக்குவாதத்தில் மனைவி செய்த... பதைபதைக்க வைக்கும் கோரம்!... 3 பேர் கைது!
- உணவு ‘டெலிவரி’ செய்வதுபோல... நாள் கணக்கில் ‘நோட்டமிட்டு’ பிளான் போட்ட இளைஞர்கள்... 50 ‘சிசிடிவி’ கேமராக்களை ஆராய்ந்து... வளைத்துப் பிடித்த ‘சென்னை’ போலீசார்...
- ‘இருமல், காய்ச்சல்னு போனேன்... எனக்கு ஊசி போட்டு அரைமயக்கத்துல’... ‘சென்னையில்’ இளைஞருக்கு ‘பேரதிர்ச்சி’ கொடுத்த ‘மருத்துவர்’...
- ‘சம்பள பணத்துக்கு ஒழுங்கா கணக்கு காட்டல’.. கோபத்தில் கணவர் செய்த கொடூரம்.. நாமக்கல் அருகே அதிர்ச்சி..!
- வழக்கமான ‘தகராறு’ என நினைத்த அக்கம்பக்கத்தினர்... சிறிது நேரத்தில் நடந்த ‘பயங்கரம்’... ‘அடுத்தடுத்து’ கிடைத்த ‘சடலங்களால்’ அதிர்ந்துபோன போலீசார்...
- ‘நள்ளிரவில்’ கேட்ட குழந்தையின் ‘அழுகுரல்’... கணவன், மனைவி உட்பட ‘3 பேருக்கு’ நேர்ந்த கொடூரம்... தப்பிய ‘இளைஞர்களை’ மடக்கிப் பிடித்த போலீசார்...
- ‘ஃபேஸ்புக்கில்’ அறிமுகம்... ‘காதல்’ திருமணம் செய்து ‘ஐந்தே’ மாதங்களில்... ‘சென்னையில்’ நடந்த சோகம்...
- ‘வெளிய கூட்டிட்டு போய்ட்டு வரேன்’... நம்பி ‘4 குழந்தைகளையும்’ அனுப்பிய ‘தாய்’... ‘தந்தை’ கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் ‘உறைந்துபோன’ போலீசார்...