ஐடி ரெய்டு.. பீரோ முழுக்க பணக்கட்டு.. லாக்கரைத் திறந்ததும் ஆடிப் போன அதிகாரிகள்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப்பிரதேச மாநிலத்தில், வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டி அமைப்பு நடத்திய சோதனை ஒன்று கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

உபி-யில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே வேளையில், பல்வேறு இடங்களில், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை ரெய்டும் நடைபெற்று வருகிறது. அப்படி நடைபெற்ற ரெய்டு ஒன்றில் தான், கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் வரை சிக்கியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் அமைந்துள்ள தொழிலதிபர் பியூஷ் ஜெயினின் வீட்டில் தான் வருமானவரித்துறை மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். பியூஷ் ஜெயின் வாசனை திரவிய நிறுவனம் ஒன்றை அங்கு நடத்தி வருகிறார். பல நாடுகளுக்கு இங்கிருந்து, வாசனை திரயவிங்களை ஏற்றுமதி செய்தும் வருகிறார். சமீபத்தில், சமாஜ்வாடி கட்சியின் சார்பாக இந்த வாசனை திரவியம் வெளியிடப்பட்டது.

முறைகேடு

வாசனை திரவியம் மட்டுமில்லாமல், பான் பாக்கு நிறுவனம் ஒன்றையும் சொந்தமாக வைத்துள்ளார். இந்நிலையில், பியூஷ் ஜெயின் தனது நிறுவனத்தின் வருவாயை மறைத்து, ஜிஎஸ்டி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார்கள் எழுந்தது. இதன் காரணமாக, அவரது வீட்டில் ரெயிடு நடத்தப்பட்டது.

அதிகாரிகள் அதிர்ச்சி

இதில், பியூஷ் ஜெயின் வீட்டில் இருந்த பெரிய லாக்கர் ஒன்றை அதிகாரிகள் திறந்து பார்த்த போது, அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த லாக்கர் முழுக்க, கோடி கோடியாக பணம் இருந்துள்ளது. பேப்பர் போட்டு சுற்றப்பட்ட, கட்டு கட்டாக பணமும் இருந்துள்ளது. சுமார் 400 க்கும் மேற்பட்ட பணக்கட்டுகள் இருந்துள்ள நிலையில், இன்னொரு பீரோவிலும் பணம் முழுவதுமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய்க்கு மேல் வரை இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ரெய்டின் போது, அதிகாரிகள் அனைவரையும் சுற்றி, பணம் நிரம்பி இருப்பதும், அதனை அவர்கள் எண்ணிக் கொண்டிருப்பதுமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

PIYUSH JAIN, IT RAID, பியூஷ் ஜெயின், ஐடி ரெய்டு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்