“பணக்காரங்க வீட்டு பொண்ணா இருந்தா.. இப்படி சொல்லாம உடல் தகனம் செய்வீங்களா?”.. ஹத்ராஸ் வழக்கில் ‘உ.பி உயர்நீதிமன்றம்’ சரமாரி கேள்வி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹாத்ரஸ் வழக்கில்  பலியான பெண்ணின் வழக்கு உத்தரப் பிரதேச உயர் நீதிமன்ற விசாரணைக்கு வந்ததை அடுத்து  இதை விசாரித்த நீதிபதிகள், செல்வந்தர் பெண்ணாக இருந்திருந்தால் இப்படி அனுமதியின்றி உடலை எரித்திரிப்பீர்களா? என சராமரியாக உ.பி. காவல்துறையிடம் கேட்டுள்ளனர்.

உ.பி, ஹத்ராஸ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கேட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் ஹாத்ரஸில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் உ.பி.யின் உயர் நீதிமன்றம் இவ்வழக்கை தானாக முன்வந்து பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதன்படி லக்னோ அமர்வின் நீதிபதிகள் முன்னிலையில் ஆஜரான பெண்ணின் குடும்பத்தார் தங்கள் பெண்ணின் முகத்தை கடைசி முறையாகக் கண்டு எந்த சடங்குகளும் செய்ய அனுமதிப்படவில்லை எனத் தெரிவித்தனர். அத்துடன் தங்கள் அனுமதியின்றி பெண்ணின் உடலை எரித்ததாக கூறினர். இதனைக் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, உ.பி. காவல்துறையின் உயர் அதிகாரிகளிடம் , “செல்வந்தர் வீட்டு பெண்ணாக இருந்திருந்தால் இப்படி குடும்பத்தாரின் அனுமதியின்றி உடலை எரித்திருப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர், பெண்ணின் குடும்பத்தாருக்காக நீதிபதிகள் முன்னிலையில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் சீமா, 3 கோரிக்கைகளை வைத்தார். அதன்படி சிபிஐ விசாரணையின் முடிவை வழக்கு முடியும்வரை வெளியிடக் கூடாது என்றும், இந்த வழக்கை உ.பி.க்கு வெளியே விசாரிக்க வேண்டும் எனவும், குடும்பத்தார் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கோண்டார். இதைக் கேட்ட அமர்வு நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்