'கொரோனா' லீவ் 'எதிரொலி'... 'தேர்வு' எழுதாமலேயே '8ம்' வகுப்பு வரை 'ஆல் பாஸ்'... சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் மாணவர்கள்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத தேவையில்லை என உத்தரபிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டது. சினிமா தியேட்டர்கள், மால்கள், பூங்காக்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் அனைத்துப் பகுதிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மார்ச் 23 முதல் மார்ச் 28ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பீதி காரணமாக ஏப்ரல் 2-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதற்காக புதிய உத்தரவு ஒன்றை உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தேர்வு எழுதாமலே மாணவர்கள் நேரடியாக அடுத்த வகுப்புகளுக்கு செல்ல உள்ளனர். ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் மார்ச் 31 வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தில் சில தனியார் பள்ளிகளில் மட்டும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வெழுத தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UTTARPRADESH, YOGI ADITHYANATH, ALL PASS, 1 TO 8 STD, STUDENTS ENJOY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்