கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட பெண் காதலனுடன் கண்டுபிடிப்பு.. 7 வருஷம் கழிச்சு வழக்கில் வந்த திடீர் திருப்பம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்தில் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட பெண் ஒருவர் தனது காதலனுடன் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது அம்மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | சிதைந்து போன உடலுக்குள் உயிரோடு இருந்த பாம்பு.. பாத்ததும் ஓட்டம் பிடிச்ச நிபுணர்.. கதிகலங்க வைத்த சம்பவம்!!
உத்திர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் 7 வருடங்களுக்கு முன்னதாக இளம்பெண் ஒருவரை கடத்தி கொலை செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவருடைய சடலமும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனை தனது மகள் தான் என கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட இளம்பெண்ணின் தந்தை கூறியிருந்தார். இதனையடுத்து இளைஞருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட பெண் தனது காதல் கணவருடன் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கொலை நடந்ததாக சொல்லப்பட்ட நேரத்தில் அந்த இளம்பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதும் பின்னர் ஹத்ராஸ் பகுதியில் உள்ள கிராமத்தில் காதலனை திருமணம் செய்துகொண்டு வசித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், விஷ்ணுவின் தாயார் சுனிதா முன்னதாக அலிகார் மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) கலாநிதி நைதானியை சந்தித்தார். 'இறந்த' பெண் உயிருடன் இருப்பது மட்டுமல்லாமல் திருமணமாகி குழந்தைகளுடன் இருப்பதாகவும் தனக்கு தகவல் கிடைத்ததாக சுனிதா போலீஸ் அதிகாரியிடம் தெரிவித்திருக்கிறார். பின்னர், காவல்துறை அதிகாரி கலாநிதி நைதானி இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் பலனாக ஹத்ராஸில் வசித்துவந்த இளம்பெண் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
7 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்ததாக சொல்லப்பட்ட பெண் திருமணமாகி வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- காதலனை மறக்க மந்திரவாதியிடம் அழைத்துப்போன பெற்றோர்.. கடைசியில மகள் வச்ச டிவிஸ்ட்..!
- தன்னை போல இருக்கும் பெண்ணை கொன்று.. தற்கொலை நாடகமாடிய இளம்பெண்.. காதலனுடன் பகீர் பிளான்!!.. தலை சுற்ற வைத்த பின்னணி!!
- பணம் பந்தயம் வைத்து லுடோ?.. வீட்டு உரிமையாளரிடம் தோற்றதால் பெண் எடுத்த முடிவு.. அடுத்த நிமிஷமே வீட்டுக்கு தெறிச்சு ஓடிய கணவன்!!
- நண்பர்களுடன் பந்தயம்.. மண மேடையில் வைத்து முத்தம் கொடுத்த மாப்பிள்ளை??.. அடுத்த செகண்ட்டே மணப்பெண் எடுத்த பரபரப்பு முடிவு..!
- நண்பருக்கு பெண் பாக்க போன இடத்தில்.. 78 வயது முதியவருக்கு மலர்ந்த காதல்.. திருமணத்தில் முடிந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
- மெடிக்கல் போயிட்டு வர்றேன்னு போன கணவர்.. Wait பண்ண மனைவிக்கு 1 1/2 வருஷம் கழிச்சு காத்திருந்த ஷாக்!!
- திருமண நிகழ்ச்சியில்.. உற்சாகமா ஆடிட்டு இருந்த மனுஷன்.. ஒரு செகண்ட்ல நடந்த விபரீத சம்பவம்.. பீதியை ஏற்படுத்தும் பின்னணி!!
- "அன்பு தான் எல்லாமே".. 20 வருடங்களுக்கு பிறகு மீட்கப்பட்ட பெண்.. ஜெயிச்ச பாச போராட்டம்.. நெகிழ்ச்சி பின்னணி!!
- ஓடும் ரயிலில் இருந்து ராணுவ வீரரை தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகருக்கு பிடிவாரண்ட்.!
- மதுராவில் 581 கிலோ போதைப் பொருளை திண்ற எலிகள்?.. நடந்தது என்ன? கோர்ட்டில் விளக்கமளித்த போலீசார்!