"ஊருல மழையே இல்ல.." புகார் கொடுத்த விவசாயி.. "யார் மேல Complaint'ன்னு பாத்தா.." பரபரப்பை உண்டு பண்ணிய கடிதம்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கொடுத்துள்ள புகார் தொடர்பான கடிதம், இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "ஐபோன் மட்டும் இல்லனா என்ன ஆகி இருக்கும்??.." ராணுவ வீரர் வாழ்க்கையில் நடந்த திருப்பு முனை.. "எப்படி'ங்க நடந்துச்சு??"

உத்தர பிரதேச மாநிலம், கோண்டா என்னும் மாவட்டத்தில் ஜலா எனும் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், வருவாய்த் துறை அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இந்த புகாரில் அவர் குறிப்பிட்ட தகவல் தான் தற்போது பலரையும் பரபரப்படையச் செய்துள்ளது. சுமித் குமார் யாதவ் என்ற அந்த விவசாயி, தன்னுடைய கடிதத்தில், கடந்த சில மாதங்களாகவே தங்கள் பகுதியில் மழை பெய்யவில்லை என்றும், மழை இல்லாத காரணத்தினால் வறட்சி மற்றும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாகவும் சுமித் குமார் யாதவ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமில்லாமல், அங்குள்ள கால்நடைகள் மற்றும் விவசாயம் உள்ளிட்டவை, மழை இல்லாததன் தாக்கத்தால், அவதிப்பட்டு வருவதாக சுமித் குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இறுதியில் தங்கள் பகுதியில் வறட்சி மற்றும் பஞ்சம் நிலவுவதற்கு மழை இல்லாமல் போனது தான் காரணம் என்றும், விவசாயிகள் மற்றும் கால்நடைகள் மட்டும் இல்லாமல், அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுமித் குமார் குறிப்பிட்டார். மேலும், யாரின் மீது புகார் என்று இருந்த இடத்தில் அவர் மழைக் கடவுளான இந்திர தேவரை குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த கடிதம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வரும் நிலையில், வருவாய்த்துறை அலுவலகத்தில் இருந்து இந்த கடிதம் மேலிடத்திற்கு சென்றதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இது தொடர்பாக வருவாய்த் துறை சார்பில் அதிகாரி ஒருவர் பேசுகையில், இது போன்ற கடிதம் ஒன்றும் தனக்கு வரவில்லை என்றும் அந்த கடிதத்தில் இருப்பது தன்னுடைய கையெழுத்து போலியான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக முறையாக விசாரிக்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ள நிலையில், விவசாயி குறிப்பிட்டுள்ள காரணம், பலரையும் திக்கு முக்காட வைத்துள்ளது.

Also Read | ஓடுற வண்டி'ல Push Ups.. "கெத்து காட்டுறதா நெனச்சி, கடைசி'ல.." நிலை குலைய வைத்த அதிர்ச்சி

UTTARPRADESH, COMPLAINT LETTER, LACK OF RAIN, FARMER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்