'திடீரென ஷெட்டரை திறந்த போலீசார்'... 'கையில் மசாலா பாக்கெட்டுடன் நின்ற ஊழியர்கள்'... 'இதையா மிளகா தூளில் கலக்குறீங்க'... அதிர்ந்து போன அதிகாரிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மசாலா பொருட்களில் கலப்படம் செய்த உரிமையாளர் கையும் களவுமாகச் சிக்கியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் உள்ள நவிப்பூர் பகுதியில் அனுப் வர்ஷ்னே என்பவர் மசாலாப் பொருட்கள் உற்பத்தி ஆலை வைத்து நடத்திவருகிறார். அங்குத் தயாரிக்கப்படும் மசாலா பொருட்கள் தரமற்றவையாக இருப்பதாகவும், அதில் கலப்படம் செய்யப்படுவதாகவும் காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து திடீரென மசாலா பொருட்கள் தயாரிக்கும் அலையில் போலீசார் சோதனை மேற்கொண்டார்கள்.

திடீரென போலீசார் ஆலையைச் சுற்றி வளைத்து சோதனை மேற்கொண்டதால் அந்த ஆலையின் உரிமையாளர் வசமாக போலீசாரிடம் மாட்டிக்கொண்டார். அப்போது மசாலா பொருட்கள் பேக்கிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் என்னவெல்லாம் கலப்படம் செய்யப்படுகிறது என்பதைப் பார்த்த போலீசார் ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்கள்.

வீட்டுச் சமையலுக்காகப் பயன்படுத்தப்படும், மிளகாய்த் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், மஞ்சள் தூள் மற்றும் பிற மசாலாப் பொருட்களில் கழுதைச் சாணம், செயற்கை நிறங்கள், வைக்கோல் மற்றும் அமிலங்கள் உட்படப் பல போலிப் பொருட்கள் கலப்படம் செய்யப்படுவதை போலீசார் கண்டறிந்தனர்.

உடனே ஆலையைச் சீல் வைத்த போலீசார், அதன் உரிமையாளரையும் உடனே கைது செய்தனர். மேலும் அங்கிருந்து 27 மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ள போலீசார், ஆய்வு முடிவுகள் வெளிவந்தவுடன் உரிமையாளரின் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்குக் கொடுத்த தகவலில் தெரிவித்துள்ளார்கள். மேலும் அங்கிருந்து 300 கிலோ போலி மசாலாப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்