இந்திய வரலாற்றிலேயே இவ்வளவு வாக்கு வித்தியாசத்துல யாரும் ஜெயிச்சது இல்ல.. யாருப்பா இந்த சுனில் குமார்?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நடைபெற்று முடிந்த உத்திர பிரதேச தேர்தலில் இந்திய வரலாற்றிலேயே மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஒருவர்.

Advertising
>
Advertising

"காரை அவரே ஓட்டிட்டு வருவாருன்னு எதிர்பார்க்கல"..ஊபர் டாக்சிக்காக காத்திருந்த இளம்பெண் குஷியில் போட்ட பதிவு..

உத்திர பிரதேசம்

உத்திர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 202 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன்மூலமாக மீண்டும் உத்திர பிரதேச முதல்வர் ஆகிறார் யோகி ஆதித்யநாத். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 112 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க் கட்சியாக உருவெடுத்து உள்ளது.

சுனில் குமார் சர்மா

உத்திர பிரதேசத்தின் சஹிஹாபாத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக களமிறங்கியவர் சுனில் குமார் சர்மா. இவரை எதிர்த்து அமர்பால் சர்மா என்பவரை சமாஜ்வாதி கட்சி நிறுத்தியது. இந்நிலையில், சுனில் குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அமர்பால் சர்மாவை விட 2 லட்சத்து 14 ஆயிரத்து 292 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

இதுவரையில் ஒரு சட்டப் பேரவை தேர்தலில் இந்தியாவில் இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் யாரும் வெற்றி பெற்றதில்லை. இதற்கு முன்னர், சட்டப்பேரவை தேர்தலில் தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார், மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார். இதுவே சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுனில் குமார் சர்மா இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

அதேபோல, இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் பாரதிய ஜனதா சார்பில் நொய்டா தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் பங்கஜ் சிங் 1,81,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.

பரோட்டா சாப்டா பரிசு, மெடல், கோப்பை... ‘வெண்ணிலா கபடி குழு’ சூரிக்கே டஃப் கொடுப்பாங்க போலயே..

UP ELECTION RESULT, SUNIL SHARMA WINS, RECORD VICTORY, UTTAR PRADESH ELECTION

மற்ற செய்திகள்