கொரோனாவை பரப்ப சதி திட்டம்!?... சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளால் பரபரப்பு!... பதறியடித்து ஓடிய போலீஸார்!... என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தின் சகேத் நகரில் உள்ள கான்பூர் இணைப்பு சாலையில் ஏராளமான ரூ.500 மற்றும் ரூ.100 நோட்டுகள் வீசப்பட்டு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தின் சகேத் நகரில் உள்ள கான்பூர் இணைப்பு சாலையில் நேற்று காலை ஏராளமான ரூ.500 மற்றும் ரூ.100 நோட்டுகள் வீசப்பட்டு இருந்தன. அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு மாநில தலைநகர் லக்னோவில் உள்ள பேப்பர் காலனி பகுதியில் இரண்டு 500 ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டு இருந்தன. இது பற்றியும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு கிடைத்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய போலீசார், தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் அவற்றின் நம்பகத்தன்மையை சோதித்து வருகின்றனர்.
ரூபாய் நோட்டுகள் கீழே கிடந்தால் உடனே எடுத்து வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்ட சில மக்கள்கூட போலீசாருக்கு தகவல் கொடுக்க காரணம், அங்கு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு வீடியோதான். அந்த வீடியோ காட்சியில் ரூபாய் நோட்டுகள் மூலம் சிலர் கொரோனா வைரஸை பரப்ப சதி திட்டம் தீட்டி, சாலைகளில் வீசுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால்தான் மக்கள் ஒருவித பயம் கலந்த பீதியுடன் கீழே கிடக்கும் ரூபாய் நோட்டுகள் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் அதுபோல சதி திட்டம் எதுவும் நடைபெறவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒரே மருத்துவமனையில் இருந்தும்...' 'தந்தை உடலை பார்க்க முடியாத மகன்...' 'நெஞ்சை' உருக்கும் 'சோக சம்பவம்...'
- 'நாட்டு' மக்களிடையே உரையாற்றும் "மோடி" ... அனைவரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ... என்ன அறிவிக்க போகிறார் 'பிரதமர்'?
- உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை என்ன?.. வெளியான தகவல்..!
- 'கொரோனாவின் பிடியில் மீண்டும் சீனா!'... புதிதாக 108 பாதிப்பு... என்ன காரணம்?
- “அரசு மட்டும்தான் அருள் செய்ய வேண்டுமென்றால்..”- வைரமுத்து ட்வீட்.. “உதவி செய்றத தடுக்கும் நோக்கம் இல்லை”- தமிழக அரசு மறுவிளக்கம்!
- ‘கொரோனா பயத்தால்’... ‘சூட்கேசுக்குள் நண்பனை வைத்து’... ‘வசமாக சிக்கிய மாணவன்’!
- பிறந்த சில நிமிடத்தில் ‘நீல நிறமாக’ மாறிய குழந்தையின் உடல்.. ‘நர்ஸ் சொன்ன யோசனை’.. சட்டென களத்தில் இறங்கிய டாக்டர்..!
- 'வூகான்' ஆய்வகத்துக்கு 'அமெரிக்கா நிதியுதவி...' 'ஆதாரங்களை' வெளியிட்டது 'தி மெயில்' பத்திரிகை... 'சொந்த காசில்' சூனியம் வைத்துக் கொண்ட 'அமெரிக்கா...'
- 'அம்மா'வ யாருக்கு தான் புடிக்காது!?... 'நான் பட்ட கஷ்டம் அவ்ளோ ஈஸி இல்ல!'... 3 நாட்கள்... 1100 கி.மீ... தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க தவப் புதல்வனின் பாசப் போராட்டம்!
- ‘ரூம் போட்டு யோசிப்பாங்களோ’!.. ‘ட்ரோன் வச்சு வீடு வீடா சப்ளை’.. போலீசாருக்கு ‘ஷாக்’ கொடுத்த டிக்டாக் வீடியோ..!