‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!’.. ‘கணவருக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்க’ மனைவிக்கு உத்தரவு! - குடும்ப நல நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பலவருடங்களாகப் பிரிந்துவாழும் கணவருக்கு மாதம்தோறும் பராமரிப்புத் தொகையாக 1000 ரூபாய் வழங்க  வேண்டும் என்று மனைவிக்கு குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் முஸாஃபர்நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், பல ஆண்டுகளாகத் தாம் மனைவியைப் பிரிந்து வாழ்கிறார். இவர் தனது ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான மனைவியிடமிருந்து மாதம்தோறும் பராமரிப்புத் தொகை பெற்றுத் தர வேண்டும் என குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.  அதில், இந்து திருமணச் சட்டம், 1955-ன் படி , ஓய்வூதியம் பெறும் தனது மனைவி, தனக்கு மாதாந்திர பராமரிப்புத் தொகை அளிக்க வேண்டும் என கடந்த 2013-ம் ஆண்டு அவர் வழக்குத் தொடர்ந்தார்.

இதை ஏற்ற முஸாஃபர்நகர் குடும்பநல நீதிமன்றம், “மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.12,000 பெற்று வரும் அந்த பெண்,  பிரிந்துவாழும் தனது கணவருக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதம் தோறும் 1000 ரூபாயை வழங்க வேண்டும்” என உத்தரவிட்டது. 1955-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட இந்த இந்து திருமணச் சட்டம், பல்வேறு பழைய நடைமுறைகளுக்கு முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்