"ஜூன் 26-ஆம் தேதி.. 1 கோடி பேருக்கு வேலை!".. 'கலக்கும் இந்திய மாநிலம்'! 'கொரோனாவில்' மிகப்பெரும் 'நம்பிக்கை' தந்த அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரும் ஜூன் 26-ம் தேதி ஒரு கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக தெரிவித்துள்ளார். வேலை, வருமானம் உள்ளிட்ட பலவற்றை இழந்து பொருளாதார ரீதியாக பலரும் இந்த கொரோனா சூழலில் தவித்துக் கொண்டு வரும் நிலையில் இந்தியாவே கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறது.

இப்படி ஒரு சூழலில் ஜூன் 26ஆம் தேதி ஒரு கோடி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் வேலைவாய்ப்பினை அறிவிக்கவுள்ளதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் ஒரு கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு தரும் முதல் மாநிலமாக உத்தரபிரதேசம் மாறும் என்றும் ஊரடங்கு காலத்தில் மாநிலத்திற்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் இதன்மூலம் அதிக பலன் பெறுவார்கள் என்றும் தெரிகிறது.‌

மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வீடியோ கான்பரன்சிங் மூலம் மாநில அளவிலான இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளதாகவும் உத்தரபிரதேசத்தில் உருவாக்கப்படும் மொத்த வேலைகளில் 50% இந்த திட்டத்தின் கீழ் இருப்பதால் இதனை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தின் கீழ் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் உத்திரப்பிரதேசத்திற்கு திரும்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் திறன்களை பதிவு செய்யுமாறும் அதிகாரிகளிடம் அம்மாநில முதல்வர் கேட்டுள்ளார். அந்த திறமைகளின் அடிப்படையில் அவர்களுக்கு வேலைகளை வழங்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி பேசிய அம்மாநில அரசாங்க செய்தி தொடர்பாளர் உத்தரப் பிரதேசத்தில் சுமார் 1.80 கோடி நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்ட பயனாளர்கள் உள்ளதாகவும், அவர்களில் 85 லட்சம் பேர் தற்போது வேலை செய்து வரும் நிலையில் ஆறு, குளங்களை மீட்டெடுப்பது தவிர, கிராமப்புற சாலைகளை அமைத்தல், தோட்ட வேலைகள் உள்ளிட்ட கிராமத்தின் பிற பணிகளும் மக்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்