"இனி ஹெலிகாப்டர் ரோட்டுலயும் ஓடும் போல".. தச்சரின் அற்புதமான கண்டுபிடிப்பு.. வியந்து பார்க்கும் மக்கள்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அவ்வப்போது நம்மை சுற்றி நடக்கும் புது புது கண்டுபிடிப்புகள் தொடர்பான செய்தி, இணையத்தில் அதிக பாராட்டுக்களை பெறும்.

Advertising
>
Advertising

Also Read | "அட, இந்தாங்க சாவிய புடிங்க".. காரை போட்டோ எடுத்த இளைஞருக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!!

அதிகம் தேர்ந்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதை விட சாதாரண மனிதர்கள் உருவாக்கும் கண்டுபிடிப்புகள் அனைத்து விதமான மக்களிடமும் சென்று  சேரும் வகையிலும் இருக்கும்.

அந்த வகையில், தற்போது ஒருவர் உருவாக்கி உள்ள விஷயம் தான், பெரிய அளவில் இணையவாசிகளின் கவனம் பெற்றும் வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம் அசம்பார்க் என்னும் பகுதியை சேர்ந்தவர் சல்மான். இவர் தச்சராக இருந்து வருகிறார். அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் இவர் நானோ கார் ஒன்றை தற்போது ஹெலிகாப்டர் வடிவில் உருவாக்கி உள்ளார். அவரது கண்டுப்பிடிப்பு தற்போது அப்பகுதியில் மட்டுமில்லாமல், இந்திய மக்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதுகுறித்து பேசும் சல்மான், சாலையில் ஓடும் ஹெலிகாப்டர் ஒன்றை அவர் உருவாக்கியதாகவும் இதற்காக நான்கு மாதங்கள் எடுத்துக் கொண்டு சுமார் 3 லட்ச ரூபாய் வரை செலவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். அதே போல, தற்போது இதற்கு அதிக டிமாண்ட்டும் உள்ளதாகவும் சல்மான் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதனை அப்பகுதி மக்கள் அதிகமாக கூடி கவனித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொள்ளாதவர்கள் கூட இதன் மூலம் அந்த அனுபவத்தை பெற அதிகம் கூடியதாகவும் தகவல்கள் கூறுகின்றது. இந்த கண்டுபிடிப்பு குறித்து இன்னும் பேசும் சல்மான், இந்த ஐடியாவை முன்னெடுத்து கொண்டு போய் இன்னும் நிறைய கண்டுபிடிப்புகள் உருவாக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல, அரசு மற்றும் பெரும் நிறுவனங்கள் உதவி செய்ய முன் வந்தால், நாங்களும் நிறைய ஹெலிகாப்டர்கள் உருவாக்கி அவற்றை நீரிலும் ஓட வைப்பது போன்றும் உருவாக்க இருப்பதாக சல்மான் கூறி உள்ளார். அடுத்தடுத்து புது புது கண்டுபிடிப்புகள் உருவாக்கவும் உள்ளதாக சல்மான் கூறி உள்ள நிலையில், சாலையில் ஓடும் ஹெலிகாப்டர் தற்போது பலரது லைக்குகளையும் அள்ளி வருகிறது.

Also Read | 2000 வருசத்துக்கு முன்னாடி... இயேசு கிறிஸ்து அணிஞ்ச அங்கி?.. அவரை சிலுவைல அறைஞ்ச ஆணியும் அங்க தான் இருக்கா?

UTTARPRADESH, CARPENTER, NANO CAR, HELICOPTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்