SI Exam இல் பிட் அடிக்க செஞ்ச வேலை.. அரண்டு போன போலீஸ்.. "இனி ஜெயில்ல தான் ரிசல்ட்டு போல!"

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாடெங்கிலும் அரசு வேலைகள் காலியாக உள்ள பல இடங்களில், அதற்கு தகுதி பெற தேர்வுகள் நடத்தி ஆட்களைத் தேர்ந்தெடுப்பது வழக்கம்.

Advertising
>
Advertising

இப்படி நடைபெறும் தேர்வுகளில் வென்று, அரசு உத்தியோகம் பெற வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு பல இளைஞர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகல் பாராமல், தங்களின் கடின உழைப்பினால், கனவுகளில் வெற்றியும் பெறுகின்றனர். முதல் தேர்விலேயே அரசு வேலைக்கு தகுதி பெற முடியாவிட்டாலும், தொடர்ந்து விடாமுயற்சியால் வெற்றி பெறும் நபர்களும் இங்கு இருக்கிறார்கள்.

இப்படி வெற்றி பெற பல நேர் வழிகள் இருந்த போதும், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அரசுத் தேர்வில் செய்த நூதன மோசடி ஒன்று, அனைவரையும் அதிரச் செய்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் சப் இன்ஸ்பெக்டர் தேர்வு நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்ள வந்திருந்தவர்களை, தேர்வு வளாகத்திற்கு அனுப்புவதற்கு முன், சோதனை செய்து போலீசார் அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சுமார் 27 வயதுடைய இளைஞர் ஒருவரை சோதனை போது, அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர் போலீசார்.

தேர்வில் ஏமாற்றி தேர்ச்சி பெற வேண்டி, அந்த இளைஞர் தலையில், ப்ளூடூத் அமைப்புடன் கூடிய விக் ஒன்றை அணிந்திருந்தார். அத்துடன், காதில் இயர்போனையும் வைத்திருந்தார். இதில், இன்னும் ஒரு அல்டிமேட் விஷயமும் உள்ளது. அந்த இளைஞர் காதில் வைத்திருந்த இயர் போன் அளவு மிகவும் சிறியது என்பதால், அதனை இளைஞரின் காதில் இருந்து போலீசாரால் அகற்ற முடியவில்லை. மோசடியில் ஈடுபட்ட அந்த இளைஞரை, தற்போது போலீசார் பிடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்றை, ஐபிஎஸ் அதிகாரி ரூபின் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

சப் இன்ஸ்பெக்டர் தேர்வின் போது, இளைஞர் செய்த மோசடி செயல் தொடர்பான வீடியோக்கள் அதிகம் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் பல விதமான கமெண்ட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். தேர்வில் வெற்றி நேர்மையான வழிகள் பல இருப்பினும், இப்படி குறுக்கு வழியைத் தேர்வு செய்வது என்றைக்கும் நல்லதொரு வெற்றியைத் தராது என்றும், போலீஸ் தேர்வில் பிட் அடிக்க நினைந்த மாணவருக்கு, ஜெயிலில் தான் ரிசல்ட் போல என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

SI EXAM, UTTARPRADESH, CHEATING, எஸ்.ஐ தேர்வு, உத்தரப்பிரதேசம், நூதன மோசடி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்