Video : "உங்க பொண்ணு கல்யாணம் நடக்கணுமா? வேணாமா?.." திருமணத்திற்கு முன்பு வந்த 'மிரட்டல்'?!.. அடுத்த கணமே 'மாப்பிள்ளை'யை வெளுத்த 'பெண்' வீட்டார்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகேயுள்ள சாஹிபாபாத் பகுதியில், சில தினங்களுக்கு முன் திருமணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுவதாக இருந்தது.

Advertising
>
Advertising

இந்த திருமணத்திற்காக, மணமக்களின் உறவினர்கள் அனைவரும் மண்டபத்திற்கு வந்து கலந்து கொண்டனர். அப்போது, திடீரென இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அடிதடியாக மாறியுள்ளது. இதில், பெண் வீட்டார் அனைவரும் இணைந்து, மாப்பிள்ளையை ஆக்ரோஷமாக தாக்கியுள்ளனர். உடனடியாக, அவரை மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சூழ்ந்து கொண்டு, மற்றவர்களிடம் இருந்து காப்பாற்றி அழைத்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி, அதிகம் வைரலானது. அது மட்டுமில்லாமல், திருமண நிகழ்ச்சி நடைபெறவிருந்த அதே நாளில், மணப்பெண் குடும்பத்தினர் அளித்த புகாரின் பெயரில், மாப்பிள்ளையை போலீசார் கைதும் செய்தனர். இரு வீட்டாரும் சேர்ந்து திருமணம் நிச்சயம் செய்திருந்த நிலையில், திடீரென திருமணத்திற்கு முன்பாக சண்டை ஏற்பட்டு, மாப்பிள்ளை கைதும் செய்யப்பட்டது, சற்று குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன் பிறகு, இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் பேரில், மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளை வீட்டார் குறித்த சில அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து, TOI குறிப்பிட்டுள்ள செய்தியில், திருமணம் நடைபெறுவதற்கு முன்பாக, மணமகனின் தந்தை, மணப்பெண்ணின் தந்தையை அழைத்து, இன்னும் 10 லட்ச ரூபாய் வரதட்சணையாக தர வேண்டும், அப்படி தரவில்லையென்றால், திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்றும் கூறி, மணப்பெனின் குடும்பத்தினரை மிரட்டியுள்ளார். பெண்ணின் வீட்டார் தரப்பில் இருந்து, ஏற்கனவே 3 லட்ச ரூபாய் பணம் மற்றும் 1 லட்ச ரூபாய் மதிப்பிலான வைர நகையையும் அளித்துள்ளனர்.

ஏற்கனவே கொடுத்த வரதட்சணையை விட அதிகம் கேட்டதால், ஆத்திரமடைந்த பெண் வீட்டார், எதிர் தரப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, மாப்பிள்ளையும் தாக்கியுள்ளனர். அது மட்டுமில்லாமல், கைது செய்யப்பட்டுள்ள மாப்பிள்ளைக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது என்றும், அதனை மறைத்து, மீண்டும் ஏமாற்றி அடுத்த திருமணத்திற்கு அவர் தயாரானதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

 

சம்மந்தப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

BRIDE GROOM, MARRIAGE, CHEATING, DOWRY, திருமணம், இந்தியா, வரதட்சணை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்