திருமண நிகழ்ச்சியில் கேட்ட துப்பாக்கி சத்தம்.. வேகமாக அறைக்குள் சென்ற மர்ம நபர்??.. கண்ணீர் விட்ட குடும்பம்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்றின் போது நடந்த சம்பவம், அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | இடி மின்னலுடன் பலத்த மழை.. "கடல் தண்ணி'ய மேகம் உறிஞ்சு எடுக்குற மாதிரி அதிசய நிகழ்வு".. "எங்க நடந்துச்சு?"

மதுரா பகுதியை அடுத்த முபரிக்பூர் கிராமத்தை அடுத்த நவ்ஜீல் என்னும் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது.

அப்போது, 'ஜெய் மாலா' என்னும் சடங்கு முறை நடந்த பிறகு, மணப்பெண் காஜல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம், அங்கிருந்தவர்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

கடுப்பில் இருந்த காதலன்..

இது தொடர்பாக, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கிடைத்த தகவலின் படி, அந்த பெண்ணை முன்பு காதலித்து வந்த நபர் தான், கொலை செய்தார் என்பது உறுதியாகி உள்ளது. தான் காதலித்து வந்த பெண், தன்னை கைவிட்டு விட்டு வேறொரு நபரைத் திருமணம் செய்து கொண்டு வாழ போவதால், காதலன் கடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

அறையில் கேட்ட துப்பாக்கி சத்தம்..

இதனால், காஜலின் மேல் கோபத்தில் இருந்த முன்னாள் காதலன், திருமணத்தின் போது அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். திருமண வீட்டில் திடீரென புல்லட் சத்தம் கேட்டதையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சத்தம் கேட்ட இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு காஜலின் நிலையைக் கண்டு அனைவரும் கண்ணீர் விட்டு கதறினர்.

இதுகுறித்து கண்ணீருடன் பேசிய பெண்ணின் தந்தை, ஜெய் மாலா என்னும் நிகழ்வை முடித்து விட்டு, தன் மகள் அறைக்குச் சென்றார் என்றும், அப்போது யாரோ முன் பின் தெரியாத ஒரு நபர் அறைக்குள் சென்று, அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டுச் சென்றதாகவும், இப்படி நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை என்றும் சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, போலீஸ் நிலையத்திலும் மகனின் முன்னாள் காதலன் மீது புகார் ஒன்றையும் அளித்துள்ளார். முன்னாள் காதலியின் திருமண நிகழ்வின் போது, காதலனே புகுந்து அவரை சுட்டுக் கொன்றுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

BRIDE, MAN, MARRIAGE, உத்தரப்பிரதேச மாநிலம், திருமண நிகழ்ச்சி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்