பாலத்துக்கு அடியில கெடந்த ஒரு டெட்பாடி...! 'ஊர்ல 2 பேர் காணாம போயிருக்காங்க...' - கொலைக்கான முடிச்சுகள் அவிழ அவிழ...' - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப்பிரதேசத்தில் 14 வயது சிறுமியை திருமணம் செய்ய முடியாததால் சிறுமியின் தம்பியை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் நொய்டா செக்டர் கலேரா கிராமத்தில் வாழ்ந்து வரும் குடும்பத்தில் 8 வயது சிறுவன் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட்-27) அன்று காணாமல் போயுள்ளார். இதையடுத்து சிறுவனின் குடும்பத்தார் காவல்நிலையத்தில் சிறுவனை காணவில்லை, எங்கு தேடியும் கிடைக்கவில்லை என புகார் அளித்துள்ளார். மேலும் புகாரில், தன் மகனை அதே பகுதியை சேர்ந்த 24 வயதான பாபு என்பவருடன் தான் கடைசியாக கண்டதாகவும், அவருக்கும் தங்கள் குடும்பத்திற்கும் முன் பகை உள்ளதாகவும் சிறுவனின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போன சிறுவனை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 24 மணி நேரம் மேல் ஆகியும் சிறுவன் கிடைக்கவில்லை. மேலும் பாபு என்பவரும் வீடு திரும்பாததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

இந்நிலையில் அடுத்த நாள், மகாமய ஃப்ளைஓவர்-செக்டர் 37 வழித்தடத்தில் காணப்படும் ஒரு பள்ளத்தில் சிறுவனின் உடலை போலீசார் கண்டுபிடித்தனர். இந்துஸ்தான் டைம்ஸின் அறிக்கையின்படி, சிறுவனின் தாய் அது தன் மகன் தான் என அடையாளம் காட்டியுள்ளார்.

மேலும் சிறுவன் காணவில்லை என்ற புகார் கொலை வழக்காக மாற்றப்பட்டு, சிறுவனின் தாயார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், 'பாபு எனது 14 வயது மகளை நீண்ட காலமாக காதலித்து துன்புறுத்தி வந்தான். அவன் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினான், நாங்கள் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை,  அதனால் எப்போதும் எங்களிடம் சண்டைக்கு வருவான். மேலும் என் மகனை கொல்ல போவதாகவும் மிரட்டினான்' என சிறுவனின் தாய் கூறியுள்ளதாக எச்.டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 14 வயது சிறுமியை திருமணம் செய்ய முடியாததால், பழிவாங்கும் நோக்கில் 8 வயது சிறுவனை கொன்ற இந்த வழக்கில் பாபு என்பவர் மீது ஐபிசி பிரிவு 302 மற்றும் 201 ன் கீழ் கொலை போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்