திருமண செலவுக்கான தொகையை தரவேண்டும்.. நீதிமன்றத்திற்கு சென்ற மகள்.. கோர்ட் அளித்த பரபரப்பு தீர்ப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமணமாகாத பெண் ஒருவர் தனது பெற்றோரிடம் திருமண செலவுக்கான பணத்தை கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதில் சட்டீஸ்கர் மாநில உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

Advertising
>
Advertising

அமரேந்திர பாகுபலிக்கே Tough கொடுக்கும் தாத்தா.. வைரல் வீடியோ..!

சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி. இவருடைய வயது 35. இவர் தனது திருமணத்திற்கு ஆகும் செலவான ரூபாய் 20 லட்சத்தை பெற்றோரிடமிருந்து பெற்றுத் தரும்படி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். திருமணமாகாத பெண் தனது பெற்றோரிடம் இருந்து திருமண செலவுகளை பெற முடியாது எனக் கூறி குடும்ப நல நீதிமன்றம் ராஜேஸ்வரி அளித்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை அடுத்து சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் ராஜேஸ்வரி.

 மனு

குடும்ப நல நீதிமன்றத்தில் ராஜேஸ்வரி அளித்த மனுவில் தனது தந்தை பினுராம் பிலாய் ஸ்டீல் ஆலையில் பணியாற்றி வருவதாகவும் இவர் விரைவில் ஓய்வு பெற இருப்பதாகவும் அவருக்கு ஓய்வு கால பணி பலன்களாக ரூபாய் 55 லட்சம் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார் மேலும் அதிலிருந்து தனது திருமணத்திற்கு செலவழிக்க வேண்டிய 20 லட்சத்தை கொடுக்குமாறு ராஜேஸ்வரி தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

விசாரணை

இந்நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி கௌதம் பாதுரி மற்றும் சஞ்சய் அகர்வால் தலைமையிலான அமர்வில் ராஜேஸ்வரியின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள் "இந்திய சமுதாயத்தில் திருமணத்திற்கு முன்பாகவும் திருமணத்திற்கு பிறகும் பணம் செலவழிக்கப்பட வேண்டியது உள்ளது. அத்தகைய செலவுகளை திருமணமாகாத பெண்கள் தங்களது பெற்றோர்களிடம் இருந்து கேட்கும்போது நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாது" என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஒரு பெண் திருமணம் ஆகாதபோதும், பெற்றோரிடம் இருந்து தனக்கான திருமண செலவுகளை இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், 1956 பிரிவுகளின் கீழ் உரிமை கோர முடியும் என சத்தீஷ்கர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மறு விசாரணை

ராஜேஸ்வரியின் மனுவை தள்ளுபடி செய்த குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மேலும், 1956 சட்டத்தின் பிரிவு 3(பி) (ii) ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளவும் குடும்ப நீதிமன்றத்தின் முன் தொடர்புடைய வாதிகள் வந்து ஆஜராகும்படியும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணமாகாத பெண்கள் தங்களது திருமணத்திற்கு ஆகும் தொகையை தங்களது பெற்றோரிடம் இருந்து பெறலாம் என சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆசையா மீன் ஆர்டர் செஞ்ச கஸ்டமர்.. தட்டில் வந்த மீனை பார்த்ததும் அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

UNMARRIED, DAUGHTER, MARRIAGE EXPENSES, PARENTS, COURT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்