'இத சும்மா விடக் கூடாது...' 'கீர்த்தி சுரேஷின் தந்தையிடம் போலீசில் புகார் அளிக்க சொன்ன மோகன்லால்...' - என்ன நடந்தது...?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். கேரளாவில் பிறந்து வளர்ந்தவர்.

'இத சும்மா விடக் கூடாது...' 'கீர்த்தி சுரேஷின் தந்தையிடம் போலீசில் புகார் அளிக்க சொன்ன மோகன்லால்...' - என்ன நடந்தது...?
Advertising
>
Advertising

இவரது அப்பா சுரேஷ் குமார் தயாரிப்பாளர் ஆவார், அம்மா மேனகா பிரபல நடிகையாக வலம் வந்தவர். சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் மரைக்காயர் திரைப்படம் வெளிவந்தது. அதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில்  கீர்த்தி சுரேஷை மர்ம நபர் ஒருவர் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டும் வீடியோ ஒன்று கேரளாவில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

unknown person posted video talking badly about Keerthi Suresh

இந்த வீடியோ நடிகர் சங்கத் தலைவர் மோகன்லாலின் கவனத்துக்கு சென்றது. உடனடியாக அவர் அதை கீர்த்தியின் தந்தை சுரேஷ் குமாருக்கு அனுப்பி, இதுகுறித்து போலீசில் புகார் அளிக்குமாறு கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் திருவனந்தபுரம் டிஜிபி அவலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமார் கூறியிருப்பதாவது, என்னுடைய மகள் கீர்த்தி சுரேஷ் நடித்த மரைக்காயர் படத்தை தோல்வி அடைய செய்வதற்காக ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் அந்த படம் குறித்து மோசமான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள என் மகள் கீர்த்தி சுரேஷ் குறித்து ஆபாசமாக திட்டி வீடியோ வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து நான் போலீசில் புகார் அளித்துள்ளேன். குற்றவாளியை விரைவில் கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்துள்ளனர்.' என்று தெரிவித்துள்ளார்.

KEERTHI SURESH, கீர்த்தி சுரேஷ், VIDEO, வீடியோ, ஆபாசப் பேச்சு, மரைக்காயர், மோகன்லால்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்