'இது நம்ம லிஸ்ட்-லயே இல்லையே!'.. நூதன முறையில் செமஸ்டர் நடத்த 'ப்ளான்!'... 'வாட்ஸ் அப்' மூலம் மாணவர்களை அலறவிட்ட பல்கலைக்கழகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக பீகார் மாநிலத்தில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்று மாணவர்களுக்கு நாளை வாட்ஸ் அப் மூலம் தேர்வுகளை நடத்தவிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளன. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் இருக்கும் மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாளை வாட்ஸ்அப் மூலம் தேர்வு நடைபெறவுள்ளது. ஆனால் இது இறுதித் தேர்வு இல்லை; அதனால் பயப்பட தேவையில்லை என பல்கலைக்கழகம் விளக்கமும் அளித்திருக்கிறது.
ஆனால் இதுபோன்ற முறையில் தேர்வுகளை நடத்துவதற்கு உயர் கல்வித் துறை எந்தவொரு வழிமுறையையும் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாளை மிட் செமஸ்டர் தேர்வு நடைபெறுகிறது. பி.காம் படிக்கும் மாணவர்களுக்கு பிடிஎஃப் வகையில் கேள்விகள் அனுப்பப்படும். மாணவர்கள் கேள்விகளுக்கு அதிலேயே பதில்களை எழுதி, மீண்டும் பிடிஎஃப் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
இது குறித்து கருத்து தெரிவித்த மாணவர் ஒருவர் "இந்த வகையில் தேர்வுகளை நடத்துவது முறையல்ல, மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தை வாட்ஸ்அப் பல்கலைக்கழகமாக மாற்ற, துணை வேந்தர் முயற்சிப்பதாக" பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். மேலும் பீகாரில் சில கிராமங்களில் இணையதள வசதி சரியாக கிடைப்பதில்லை; அவர்களால் எப்படி இந்தத் தேர்வை எழுத முடியும் என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில்... அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்ட செவிலியர்கள்!... பதறவைக்கும் பின்னணி!
- சீனாவின் வுகான் ‘மீன் சந்தையில்’ இருந்து கொரோனா பரவவில்லை?.. வெளியான ‘புதிய’ தகவல்..!
- ‘பணக்காரர்களை பாத்தாதான் பயமா இருக்கு’.. ‘அவங்கதான் வெளிநாடு போய்ட்டு வந்து நோயை இறக்குமதி செய்றாங்க’.. முதல்வர் பழனிசாமி..!
- வெறும் 38 நாட்களில் '30 ஆயிரம்' பேர் உயிரிழப்பு... 'அதிர்ச்சியில்' உறைந்து போன நாடு!
- சிகிச்சையளிக்கும் 'டாக்டர்கள்', நர்ஸ்களுக்கு... கொரோனா 'பரவுவது' இப்படித்தானாம்... வெளியான 'புதிய' தகவல்!
- முதன்முறையாக தாத்தாவின் 'பிறந்தநாள்' கொண்டாட்டத்தை... தவிர்த்த 'வடகொரிய' அதிபர்... கொரோனா காரணமா?
- ஏப்ரல் 20-க்கு பின் 'வேலைக்கு' செல்வோர்... கண்டிப்பாக 'கடைபிடிக்க' வேண்டிய வழிமுறைகள்!
- திருப்புமுனை: கொரோனா வைரஸின் முழு 'மரபணுவையும்'... வரிசைப்படுத்துவதில் 'இந்திய' விஞ்ஞானிகள் வெற்றி!
- 11 நாட்களில் '92 ஆயிரம்' அழைப்புகள்... 'அந்த' வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை... 'ஜெட்' வேகத்தில் உயர்வு!
- வேலையிழப்பின் 'இரண்டாம்' அலை... '2007-09' நிலையே 'மீண்டும்' வரும் 'அபாயம்'... வால் ஸ்ட்ரீட் ஜர்னல் 'தகவல்'...