'அறிமுகமாகும் நேச்சுரல் பெயின்ட்...' 'பசுவோட சாணம் தான் இதுல முக்கிய பொருள்...' - அறிமுகம் செய்யும் மத்திய அமைச்சர்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் காதி கிராமத் தொழில்கள் ஆணையம் மாட்டு சாணாதிலிருந்து தயாரித்த புது வகையான சுவர் வர்ணத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாளை (12-01-2021) அறிமுகப்படுத்த உள்ளார்.

பாரம்பரிய பொருட்களையும், சுற்றுசூழக்கு தீங்கு விளைவிக்காத இயற்க்கை பொருட்களையும் தயாரித்து விற்றுவரும் காதி கிராமத் தொழில்கள் ஆணையம் தற்போது சுற்றுச்சூழலுக்கு உகந்த, விஷத் தன்மையற்ற வகையில் 'காதி இயற்கை வர்ணம்' என்று பெயரிடப்பட்டுள்ள சுவர் பூச்சுக்கலவையை தயாரித்துள்ளது.

மேலும் இந்த சுவர் பூச்சுக்கலவை, பூஞ்சைக்கும்,  நுண்ணுயிரிக்கும் எதிராக செயல்படும் முதல் வர்ண தயாரிப்பாக இருக்கும் எனவும், பசு சாணத்தை அடிப்படைப் பொருளாகக் கொண்டு மணமில்லாமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பூச்சுக்கலவை குறைந்த விலையில்  இருப்பதுடன்  இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றையும் பெற்றுள்ளது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது அதுமட்டுமில்லாமல், காதி இயற்கை வர்ணம் டிஸ்டம்பர் வர்ணம், நெகிழி எமல்ஷன் வர்ணம் என்ற 2 விதங்களில் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்தப் புது வகையான வர்ணத்தை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை, குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் திரு நிதின் கட்கரி ஜனவரி 12-ஆம் தேதி (செவ்வாய்) அவரது இல்லத்தில் அறிமுகப்படுத்த உள்ளார் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

காதி இயற்கை எமல்ஷன் வர்ணம் இந்திய தர நிர்ணய அமைப்பின் 15489:2013 சான்றையும், காதி இயற்கை டிஸ்டம்பர் வர்ணம் இந்திய தர நிர்ணய அமைப்பின் 428:2013 சான்றையும் பெற்றுள்ளது. இந்த காதி இயற்கை டிஸ்டம்பர் மற்றும் எமல்ஷன் வர்ணங்கள் தயாரிப்பின் மூலம், விவசாயிகள்/ கோ சாலையின் ஒரு விலங்கிற்கு ஆண்டிற்கு சுமார் ரூ. 30,000 கூடுதல் வருமானமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்