இந்தியாவில் புதிய கொரோனா பரிசோதனை முறை!.. அப்படி என்ன ஸ்பெஷல்?.. தடுப்பூசி நிலவரம் என்ன?.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெலுடா என்ற புதிய கொரோனா பரிசோதனையை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், நேற்று தனது சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியவர்களுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது கொரோனா பரிசோதனைக்கு பெலுடா என்ற புதிய பரிசோதனையில், 2000 நோயாளிகளுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில், 98 சதவீதம் துல்லியமாக இருந்ததாக ஹர்ஷவர்தன் கூறினார். பெலுடா பரிசோதனைக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் மற்றும் பெங்களூரில் உள்ள அணுசக்தி துறையின் உயிரியல் தேசிய மையம் ஆகியவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவிட் தடுப்பூசிக்கான முதல் கட்ட பரிசோதனை முடிந்து , 2-ம் கட்ட பரிசோதனைகள் நடந்து வருவதாகவும், 3-ம் கட்ட பரிசோதனை தொடரவுள்ளதாகவும் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். மேலும், வரவிருக்கும் திருவிழாக்காலங்களில், மக்கள் வெளியே செல்லாமல், வீட்டிலேயே கொண்டாடும்படியும், கூட்டத்தை தவிர்த்து, மத்திய அரசின் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் ஹர்ஷவர்தன் கேட்டுக் கொண்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்