Budget 2023: அல்வா கிளறிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.. பட்ஜெட்டுக்கும் அல்வாவுக்கும் இப்படி ஒரு சம்பந்தம் இருக்கா..?!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் அல்வா தயாரிக்கும் பணிகள் நேற்று நடைபெற்றிருக்கிறது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிளறி பணியார்களுக்கு வழங்கினார்.

Advertising
>
Advertising

                       Images are subject to © copyright to their respective owners.

Also Read | வருங்கால மனைவியோடு அடுத்தடுத்து இரண்டு பிரபல கோயில்களில் சாமி தரிசனம் செய்த ஆனந்த் அம்பானி..! வீடியோ

2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டை போலவே டிஜிட்டல் முறையில் பட்ஜெட் வாசிக்கப்பட இருக்கிறது. காகிதமற்ற முறையில் பட்ஜெட் வாசிக்கப்படும் நிலையில் அனைத்து பட்ஜெட் ஆவணங்களும் "யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியில்" வெளியிடப்பட உள்ளன. இதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் செயலி மூலமாக அறிந்துகொள்ளலாம். பிப்ரவரி 1 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை வாசித்த பிறகு பட்ஜெட் விவரங்கள் யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், பட்ஜெட் உருவாக்க பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அதன் ஒருபகுதியாக அல்வா கிளறும் பணி நேற்று நடைபெற்றிருக்கிறது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிக்கும் போது, ரகசியங்கள் காக்கப்படும் பொருட்டு லாக்-இன் நடைமுறை அமல்படுத்தப்படும். அதன்படி பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் அடுத்த சில நாட்களுக்கு நார்த் பிளாக்கில் உள்ள அலுவலகத்திலேயே தங்க வேண்டும்.

இந்த லாக்-இன் நடைமுறை அமலுக்கு வருவதை உறுதிப்படுத்துவதே இந்த அல்வா கிளறும் விழா. அதன்படி நேற்று நார்த் பிளாக்கில், மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதித்துறை இணை அமைச்சர்கள் பங்கஜ் செளத்ரி, பகவத் கிசன்ராவ் காரட் ஆகியோர் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.

Images are subject to © copyright to their respective owners.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது. இதனால் பட்ஜெட்டில் பல சிறப்பு அம்சங்கள் இடம்பெறும் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட் இது என்பதால் இந்த பட்ஜெட்டில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இடம்பெறும் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Also Read | "நீங்க டைட்டில் வின்னர் இல்ல, Total Winner".. விக்ரமனுக்கு 'திருமாவளவன்' கொடுத்த பெயர்.. கூடவே கொடுத்த நெகிழ்ச்சியான பரிசு!!

UNION BUDGET 2023, HALWA CEREMONY, NIRMALA SITHARAMAN, FINANCE MINISTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்