'படிப்புல ரொம்ப கெட்டிக்காரி... அவசர பட்டுடியே தங்கம்!'.. ஆன்லைன் வகுப்பை பார்க்க முடியாத விரக்தியில்... மாணவி எடுத்த 'மனதை' சிதறடித்த முடிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டிவி பழுதானதால் ஆன்லைன் வகுப்பை பார்க்க முடியாத 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துக்கொண்டார்.

Advertising
Advertising

கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் கேரள அரசு ஆன்லைனின் வகுப்புகள் எடுக்கத் தொடங்கியுள்ளன. மாணவர்கள் வீடுகளில் இருந்தே குறிப்பிட்ட்ட தொலைக்காட்சி சேனல் மூலமாகவும், இணையத்திலும் வகுப்புகளை கவனிக்க பிரத்யேக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வீட்டில் டிவி பழுதானதால் ஆன்லைன் வகுப்பை பார்க்க முடியாத 10ம் வகுப்பு மாணவி தீயிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மலப்புரத்தில் உள்ள வலஞ்சேரியில் வசித்து வரும் 10ம் வகுப்பு மாணவி படிப்பில் சிறந்து விளங்கியுள்ளார். அவர் வீட்டில் இருந்த டிவி பழுதாகிவிட்டதால் ஆன்லைன் வகுப்பை கவனிக்க முடியாமல் போயுள்ளது.

வகுப்பை ஆன்லைனில் பார்க்கலாம் என்றாலும் அவர் வீட்டில் உள்ள ஒரு தொலைப்பேசியில் சார்ஜ் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த மாணவி தீயிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். வீட்டிற்கு அருகே தீயில் காயமடைந்த மாணவியைக் கண்ட அவரது அம்மா கூச்சலிட, அருகில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கூலித்தொழிலாளியான மாணவியின் தந்தைக்கு தற்போது வேலை இல்லை என்பதால், வீட்டில் பழுதான டிவியை சரி செய்ய முடியாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. வீட்டில் டிவி செல்போன் இல்லாத மாணவர்களுக்கும் சென்றடையும் விதமாக ஆன்லைன் வகுப்புகள் இருக்க வேண்டுமென்றும், அதற்கு அரசு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்றும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்