'கல்லூரிகளை எப்போது திறக்கலாம்?'... 'மத்திய அரசுக்கு'... 'யுஜிசி குழு முக்கிய பரிந்துரை'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் ஊரடங்கால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் எப்போது தொடங்கலாம் என யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில்  செமஸ்டர் தேர்வு எப்போது நடத்தவது, ஆன்லைனில் நடத்துவதா? வகுப்புகளை மீண்டும் எப்போது தொடங்குவது, அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாக  யுஜிசி சார்பில் இரண்டு நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. 

இந்த இரண்டு குழுக்களும் தற்போது யுஜிசியிடம் சில முக்கியமான பரிந்துரைகளை கொடுத்து இருக்கின்றார்கள். மத்திய அரசுக்கும் வெளிப்படையாக அந்த பரிந்துரை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வரும் கல்வியாண்டில் ஜூலை மாதம் கல்லூரிகள் திறப்பதற்கு பதிலாக, செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும், நீட், ஜே.இ.இ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ஜூன் மாதம் நடத்தலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளார்கள்.

நடத்தப்படாத இறுதி செமஸ்டர் தேர்வுகளை, உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால், ஆன்லைனிலேயே நடத்திக்கொள்ளலாம் என்றும், இல்லாவிட்டால் ஊரடங்கு முடிந்தவுடன் சூழலைப் பொறுத்து அல்லது வரும் ஜூலை மாதம் தேர்வுகள் நடத்தலாம் என இந்த குழு பரிந்துரைத்துள்ளது. இதன் அடிப்படையில், மத்தியவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய அறிவிக்கையை 10 நாட்களில் வெளியிட உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்