“கண்டிப்பா Pick Up பண்ண வந்துருவீங்க தானே?”.. கஸ்டமரின் கேள்விக்கு Cab டிரைவர் சொன்ன ‘செம’ வைரல் பதில்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு Uber கார் டிரைவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கரிஷ்மா மேஹ்ரோத்ரா என்ற பெண், Uber கார் டிரைவர் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். கடந்த மே 15-ம் தேதி Uber ஆப் மூலம் கார் ஒன்றை அப்பெண் புக் செய்துள்ளார். புக் செய்த உடன் சம்பந்தப்பட்ட கார் டிரைவருக்கு மேசேஜ் செய்த கரிஷ்மா மேஹ்ரோத்ரா, ‘நீங்கள் நிச்சயம் வந்து பிக் அப் செய்து கொள்வீர்கள் தானே?’ என கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த Uber கார் டிரைவர், ‘நிச்சயம் வருவேன். நான் இப்போது பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் பாதி மிச்சம் இருக்கிறது. சாப்பிட்டுவிட்டு நிச்சயம் வந்து பிக் செய்கிறேன்’ என பதில் அளித்துள்ளார். இந்த உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்டை கரிஷ்மா மேஹ்ரோத்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அந்த கார் டிரைவரின் நேர்மையை பாராட்டியுள்ளார்.
சமீபத்தில் OLA மற்றும் Uber நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் சில குற்றச்சாட்டுகளை வைத்தனர். அந்நிறுவனங்களின் கேன்சலேஷன் கொள்கை வாடிக்கையாளர்களுக்கு தேவையில்லாமல் பெனால்டி தொகை கட்டும் சூழலை உருவாக்குவதாக தொடர்ந்து புகார் எழுந்தது.
இதனை அடுத்து இந்த இரு நிறுவனங்களும் இந்த புகார் தொடர்பான குறைகளை சீரமைத்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும் நுகர்வோர் விவகாரங்கள் செயலாளர் ரோஹித் குமார் சிங் அறிவுறுத்தியிருந்தார். இந்த சூழலில் Uber கார் டிரைவர் ஒருவர் பெண் வாடிக்கையாளரிடம் நேர்மையாக நடந்துகொண்டது வரவேற்பை பெற்று வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘என்னென்ன பண்றாங்கன்னு பாருங்க..!’- விண்வெளியில் உணவு டெலிவரி… பெரிய அங்கீகாரத்தைப் பெற்ற Uber Eats..!
- ஆட்டோ கட்டணத்திற்கு வரி.. மத்திய அரசு புதிய உத்தரவு
- 'பீக் டைம்ல கட்டணத்தை 1.5 மடங்கு உயர்த்தலாம்'... 'ஓலா, உபரில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்'... மத்திய அரசின் அதிரடி உத்தரவு!
- "'கொரோனா'வால 'அடி' மேல 'அடி' வாங்கிட்டோம்"... "எல்லாருக்கும் மெயில் போட்டாச்சு"... முன்னணி நிறுவனத்தின் 'முடிவால்'... நொந்து போன 'ஊழியர்கள்'!!!
- 'இந்தியாவில் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு'... 'பிரபல நிறுவனம் அறிவிப்பு'... 'பின்னடைவிலிருந்து வளர்ச்சிக்கு திரும்ப நடவடிக்கை!...
- 'எங்களுக்கு வேற ஆப்ஷன் இல்ல'... '600 பேரை வீட்டிற்கு அனுப்பிய பிரபல நிறுவனம்'... ஆனா இந்த உதவிய மட்டும் பண்றோம்!
- ‘காத்திருக்க வேண்டிய அவசியம் இல்ல’... ‘பேருந்துகள் எப்போ வரும்னு தெரிஞ்சுக்கலாம்’... ‘புதிய செயலி அறிமுகம்’!
- ‘ஓலா, உபர் கார் புக்கிங்கின்’... ‘கேன்சல் அபராதத் தொகையில் வரும் மாற்றம்’... ‘வெளியான புதிய தகவல்’!
- 'குறைவான வருமானம்’... ‘செலவு அதிகம்’... '3-வது முறையாக’... ‘ஆள்குறைப்பில் பிரபல நிறுவனம்’!
- 'இங்கிருந்த பாதைய காணோம் சார்'.. 'அதான் இப்படி பண்ணிட்டேன்'.. ஊபர் டிரைவர் செய்த வைரல் காரியம்.. வீடியோ!