'வீட்டின் முன்பு காயப்போட்டிருந்த 'பெண்ணின் உள்ளாடை'... 'பைக்கில் சர்ரென வந்த வாலிபர்கள்'... 'இப்படி பங்கமா சிக்கிட்டாங்களே'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருடப்போன இடத்தில் திருடர்கள் சிக்கிய வரலாறு பல இடத்தில் உண்டு. ஆனால் இந்த இளைஞர்கள் இந்த பொருளையா திருடினார்கள் என்பதை அறிந்து இணையமே அவர்களைக் கிண்டலடித்து வருகிறது.
உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் சதார் காவல் நிலைய எல்லைப் பகுதியில் வசித்து வரும் சஞ்சய் சவுத்ரி என்பவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரைக் கேட்ட போலீசாரும் கொஞ்சம் திகைத்துத் தான் போனார்கள்.
அவர் அளித்திருந்த புகார் மனுவில், தன்னுடைய மகளின் உள்ளாடைகளை இரண்டு வாலிபர்கள் திருடிச் செல்லும் வீடியோவை எடுத்து வைத்திருப்பதாகவும். வாலிபர்கள் இருவரும் உள்நோக்கத்துடன் இதனைச் செய்திருப்பதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது மனுவில் கோரியிருந்தார்.
இதற்கிடையே சச்சின் குப்தா என்ற ஊடகவியலாளர் இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், இளைஞர்கள் இருவர் ஸ்கூட்டர் ஒன்றில் வேகமாக வருகிறார்கள். அதில் பின்னால் இருந்து வந்த இளைஞர் இறங்கிச் செல்கிற நேரத்தில் மற்றொரு வாலிபர் ஸ்கூட்டரை ஸ்டேட்டு போட்டுவிட்டு சஞ்சய் சவுத்ரியின் வீட்டு வாசலில் காயப்போட்டிருந்த உள்ளாடையைத் திருடி வந்து ஸ்கூட்டியின் சீட்டுக்குக் கீழே வைத்துப் பூட்டிவிட்டு வேக வேகமாக ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து பறந்துவிடுகிறார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், வாலிபர்களின் விசித்திர செயலை கண்டித்துத் திட்டியும், கிண்டலடித்தும் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த நூதன திருட்டு சம்பவம் தொடர்பாக அந்த இரண்டு வாலிபர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முகமது ரோமின் மற்றும் முகமது அப்துல் என்ற அந்த இரு வாலிபர்களும் ‘வேடிக்கைக்காக’ உள்ளாடையைத் திருடியதாக காவல்துறையினரிடம் கூறியிருக்கின்றனர். இருவர் மீதும் திருட்டு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
ஆபிஸ் நேரத்தை விட ‘2 நிமிஷம்’ முன்னாடியே கிளம்புனதுக்கு இப்படியொரு தண்டனையா.. ‘ஷாக்’ ஆன ஊழியர்கள்..!
தொடர்புடைய செய்திகள்
- 'சரக்கு அடிக்க போட்ட மாஸ்டர் பிளான்'... 'சூனா பானா அவதாரம் எடுத்த இளைஞர்கள்'... இளசுகளுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!
- "ஊருக்கு போர அவசரத்துலயா இதை பண்ண..." "ஏம்பா உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல..." 'புலம் பெயர்' வாலிபரின் 'வெறித்தனமான' செயல்...
- ‘செலவுக்கு பணம் இல்ல’... ‘இளைஞர்கள் செய்த காரியம்’... 'விசாரணையில் வெளியான தகவல்!
- ‘5 ஆண்டுகளில் 20 லட்சம் ரூபாய்’.. ‘படுக்கையறையில் வைத்த ரகசிய கேமராவால்’.. ‘சிக்கிய சென்னைப் பெண்’..
- ‘இப்படியெல்லாம் கூட ஏடிஎம்ல திருட முடியுமா?’.. ‘ரூம் போட்டு யோசிப்பாங்க போல’..
- 'சார் கொஞ்சம் திரும்புங்க'.. 'முதுகில் தட்டிய மர்ம நபர்கள்'.. சென்னையில் இயக்குநருக்கு நேர்ந்த பரிதாபம்!
- ‘இளைஞர் கைதுக்கு காரணமான 2 மாம்பழம்’.. விமான நிலையத்தில் நடந்த வித்தியாசமான சம்பவம்..!
- ‘ஓடும் பஸ்ஸில் ப்ளான் போட்டு திருடிய கும்பல்’.. மிரள வைத்த நூதன கொள்ளை சம்பவம்..!
- 'திருட்டு பைக்கில் வந்த 'காதல் ஜோடி'யின் பகீர் செயல்'... அதிர்ந்த பெண்... சென்னையில் பரபரப்பு சம்பவம்!
- 'பசங்களை வச்சு,'டியூசன் மாஸ்டர்' பண்ணுற வேலையா இது'...பொறியில் சிக்கிய மாஸ்டர்!