வீட்டிலிருந்து திடீரென மாயமான 2 ‘இளம்பெண்கள்’.. வாட்ஸ் அப்புக்கு வந்த ஒரே ஒரு ‘மெசேஜ்’.. ஆடிப்போன பெற்றோர்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இரண்டு இளம்பெண்கள் வீட்டை விட்டு வெளியேறிய பின் அவர்களது பெற்றோர்களுக்கு அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த காத்தூன் என்பவரின் மகள் சிம்ரன் (20). இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். பார்வதி என்பவரின் மகள் புஷ்பலதா (21). இவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். சிறுவயது முதலே சிம்ரனும், புஷ்பலதாவும் தோழிகளாக இருந்துள்ளனர். இரண்டு பேரும் எப்போதும் ஒன்றாகவே சுற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் திடீரென மாயமாகியுள்ளனர். இதனால் பதறிப்போன அவர்களது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் சிம்ரன் மற்றும் புஷ்பாவின் பெற்றோருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்துள்ளது.

அதில், ‘10 ஆண்டுகளுக்கும் மேலாக தோழிகளாக இருந்த தங்களது நட்பு, தற்போது காதலாக மாறியுள்ளது. திருமணமானால் இருவரும் அவரவர் கணவர் வீட்டுக்கு செல்ல வேண்டி வரும். அதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளோம்’ என குறிப்பிட்டுள்ளனர்.

இதற்காக இளம்பெண் புஷ்பா, தனது உடை மற்றும் சிகை அலங்காரத்தை ஆண் போல மாற்றிக்கொண்டு, சிம்ரனை திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களை யாரும் தேட வேண்டாம், நிம்மதியாக வாழ விடுமாறு கூறியுள்ளனர். காதலி சிம்ரனை திருமணம் செய்துகொள்வதற்காக புஷ்பாலதா தனது வீட்டில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

தங்களது பெண் பிள்ளைகளின் காதல் திருமணம் குறித்து அறிந்து கலங்கிப்போய் நின்ற பெற்றோர்கள், அவர்கள் இருவரையும் மீட்டுத்தரும்படி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்தநிலையில் திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் 90’s கிட்ஸ்கள் கலக்கத்தில் உள்ள நிலையில், பெண்களே பெண்களை திருமணம் செய்துகொண்டால் தங்களது நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்