ஒரு இளைஞரை காதலித்த 2 இளம்பெண்கள்.. ‘யாராவது ஒருத்தர் விட்டுக்கொடுங்கம்மா’.. முடியாது என அடம்பிடித்த பெண்கள்.. கடைசியில் பஞ்சாயத்தார் சொன்ன ‘கிரேட்’ ஐடியா..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒரு இளைஞரை இரண்டு இளம்பெண்கள் திருமணம் செய்துகொள்ள போட்டிபோட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஸ்பூரைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர், ஒரே நேரத்தில் இரண்டு இளம்பெண்களை காதலித்து வந்துள்ளார். நீண்ட நாள்களாக ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை சந்தித்து வந்துள்ளார். திடீரென திருமண பேச்சு எடுக்கவே, உறவினர் ஒருவர் மூலம் இந்த உண்மை அந்த இரு இளம்பெண்களுக்கு தெரியவந்துள்ளது.

இந்த விஷயம் தெரிந்ததும் இளைஞரை ரவுண்டு கட்டி அடிப்பார்கள் என எதிர்பார்த்தால், இளம்பெண்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். அந்த இளைஞரை யார் திருமணம் செய்துகொள்வது என இருவருக்கும் இடையே போட்டாபோட்டி ஏற்பட்டுள்ளது. யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து செல்லுங்கள் என அப்பெண்களின் உறவினர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

ஆனால் இதை எதையுமே அவர்கள் ஏற்றுக்கொண்டபாடில்லை. அப்போது இந்த விவகாரத்தை பஞ்சாயத்தில் பேசி முடிவெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாயத்தில் ஊர் பெரியவர்கள் ஒரு யோசனை தெரிவித்துள்ளனர். விளையாட்டுப் போட்டியைப்போல் காசை சுண்டிப் பார்த்து பெண்ணை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட இரண்டு இளம்பெண்களும், இளைஞரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து காசை சுண்டிப் பார்த்ததில் ‘பூ’ விழுந்துள்ளது. உடனே வெற்றி பெற்ற இளம்பெண், சக போட்டியாளரான மற்றொரு இளம்பெண்ணுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்ததுதான் இதில் சிறப்பே. இதனைத் தொடர்ந்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் டாஸில் வெற்றி பெற்ற பெண்ணுக்கு, இளைஞருக்கும் திருமணம் நடந்துள்ளது.

டாஸ் போட்டு மணமகள் முடிவு செய்யப்பட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருமணம் குறித்து நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்