'நாங்க அதிரடியும் காட்டுவோம்'... கலக்கும் 'பெண் அதிகாரிகள்'!... கொண்டாடிய நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில்,7வது மற்றும் இறுதி கட்ட வகுப்பதிப்பு வரும் மே 19-ம் தேதி நடைபெற இருக்கிறது.இதனிடையே தங்களின் தேர்தல் பணிக்காக,இரண்டு பெண் தேர்தல் அதிகாரிகள் இணையத்தை கலக்கி வருகிறார்கள்.

உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற 5வது கட்ட வாக்குப்பதிவின்போது லக்னோவில் அமைந்திருந்த வாக்குச்சாவடி ஒன்றில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவர் தான் ரீனா திவேதி.இவர்  உத்திர பிரதேச மாநிலப் பொதுப்பணித்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.35 வயதான இவர்,லக்னோவில் அமைந்திருந்த வாக்குச்சாவடி ஒன்றில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய போது,அங்கிருந்த வாக்குப்பதிவு பெட்டியினை சுமந்து வரும்போது,எடுத்த புகைப்படங்கள் மூலம் தற்போது வைரலாகி வருகிறார்.அதோடு ரீனாவைப் போன்று இணையத்தில் வைரலான மற்றோரு அதிகாரி தான் யோகேஷ்வரி கோகித்.

இவர் மத்திய பிரதேச மாநிலம் போபாலின் கோவிந்தபுரா ஐஐடியில் அமைந்திருந்த,வாக்குச்சாவடியில் 6வது கட்ட வாக்குப்பதிவின்போது தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார்.கனரா வங்கியில் அதிகாரியாக பணியாற்றும் இவர்,ஸ்டைலாக வாக்குப்பெட்டியுடன் இவர் நடந்துவரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.இதனிடையே இவர்களின் உடை மற்றும் தோற்றங்களை வைத்து மட்டுமே இவர்கள் பிரபலமாகவில்லை எனவும்,தேர்தலின் போது இவர்கள் கண்டிப்புடன் நடந்து கொண்ட தன்மையும் தான் முக்கிய காரணம் என நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

வழக்கம் போன்று இரு அதிகாரிகளின் ஆடை குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில்,உடைகளை வைத்து ஒரு பெண்ணை தீர்மானிப்பது தவறானது என நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

LOKSABHAELECTIONS2019, ELECTIONCOMMISSION, ELECTIONS, REENA DWIVEDI, YOGESHWARI GOHITE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்