‘இதையெல்லாம் நம்பர் பிளேட்டில் எழுதக்கூடாது’.. ‘250க்கும் அதிகமானவர்களுக்கு அபராதம் விதித்த போலீஸார்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப்பிரதேச மாநிலப் போக்குவரத்து போலீஸார் நம்பர் பிளேட்டுகளில் சாதிச் சொற்கள் கொண்ட இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

டெல்லி அருகே உள்ள நொய்டா நகரில் நம்பர் பிளேட்டுகளில் சாதிச் சொற்களுடன் பயணித்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் அபராதம் விதித்துள்ளனர். ஆபரேஷன் க்ளீன் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கவுதம் புத்தா நகரில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதம் விதிக்கப்பட்ட 250க்கும் அதிகமான வாகனங்களில்  133 வாகனங்கள் சாதிக் கருத்துக்கள் அல்லது அது தொடர்பாக சவால் விடுக்கும் சொற்களைக் கொண்டிருந்துள்ளன. இதில் நகர்ப்புறத்தைச் சேர்ந்த வாகனங்கள் 100 மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்த வாகனங்கள் 33 ஆகும். மேலும் ஆக்ரோஷமான கருத்துக்களுடன் இருந்த காரணத்திற்காக 91 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள கவுதம் புத்தா நகரின் மூத்த காவல் கண்காணிப்பாளர் வைபவ் கிருஷ்ணா, “நம்பர் பிளேட்டுகளில் சாதிச் சொற்கள் அல்லது ஆக்ரோஷமான கருத்துக்களை எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தக்கூடாது. இதுபோன்ற எழுத்துக்கள் மக்களிடையே பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்கும். அதனால் அவர்கள்மீது நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

UTTARPRADESH, TRAFFIC, POLICE, FINE, BIKE, TWOWHEELER, CASTE, DELHI, NOIDA, NUMBERPLATE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்