வண்டியே 1 லட்சம் தான்.. நம்பர் பிளேட்டுக்கு இவ்வளவு தொகையா?.. மொத்த மாநிலத்தையும் பரபரக்க வச்ச நபர்.. முதல்வர் வரை சென்ற விஷயம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இமாச்சல் பிரதேசத்தில் இருசக்கர வாகனத்திற்கான நம்பர் பிளேட் ஏலத்தில் வினோத சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து அந்த மாநில முதல்வர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளிடத்தில் கேட்டிருக்கிறார்.

Advertising
>
Advertising

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | "நீங்க Like பண்ணா மட்டும் போதும்.. பணம் கொட்டும்".. புதுசா உருட்டிய கும்பல்.. எச்சரிக்கும் போலீஸ்.. அதிர்ச்சி பின்னணி..!

பொதுவாக வாகனங்கள் மீது பலருக்கும் ஈடுபாடு இருக்கும். தங்களுக்கு பிடித்தமான பிராண்ட், நிறம் ஆகியவற்றை பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கும் மக்கள் நம்பர் பிளேட் விஷயத்திலும் ரொம்பவே ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். தங்களது பிறந்தநாள், அதிர்ஷ்ட எண் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் நம்பர் பிளேட்டை தேர்ந்தெடுப்பதுண்டு. அப்படி ஃபேன்சி நம்பர்களுக்கு கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இமாச்சலப் பிரதேச மாநிலத்தை பொருத்தவரையில் ஃபேன்சி நம்பர்களுக்கான ஏலம் இணையம் மூலமாக நடைபெறும். இதில் மக்கள் தங்களுக்கு தேவையான எண் கொண்ட நம்பர் பிளேட்டை ஏலத்தில் வாங்கிக் கொள்ளலாம்.

Images are subject to © copyright to their respective owners.

அந்த வகையில் சமீபத்தில் HP  99-9999 எனும் நம்பர் பிளேட் ஏலத்திற்கு வருவதாக இமாச்சலப் பிரதேச போக்குவரத்து துறை அறிவித்திருந்திருக்கிறது. சிம்லாவில் உள்ள கொட்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தை சேர்ந்த HP 99 என்ற இந்த எண் ஏலத்தில் கடும் போட்டியை உருவாக்கி இருக்கிறது. இதில் 26 பேர் கலந்து கொண்டதாக தெரிகிறது. போக்குவரத்து துறை அதிகாரிகளின் தகவலின் படி இந்த ஏலம் தொடர்பான நடவடிக்கைகள் கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் அதிகபட்சமாக ஏலம் கேட்கப்பட்ட தொகை தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

அதில் அதிகபட்சமாக ஒருவர் 1.1 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், இது தொடர்பான ஸ்க்ரீன்ஷாட் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகியது. ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரு சக்கர வாகனத்துக்கு ஒரு கோடிக்கு நம்பர் பிளேட்டா? என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவந்தனர். இந்நிலையில் இந்த விஷயம் அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வரை சென்றிருக்கிறது.

இதனையடுத்து இந்த ஏலம் குறித்து தகவல்களை சமர்ப்பிக்குமாறு துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் சேத்னா கந்த்வால் மற்றும் போக்குவரத்து இயக்குனர் அனுபம் காஷ்யப்பிற்கு உத்தரவிட்டிருக்கிறார் இமாச்சல பிரதேச முதல்வர். இது அம்மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | ஓடும் ரயிலில் வடமாநிலத்தவர் மீது தாக்குதல்.. வைரலான வீடியோவால் சிக்கிய நபர்.. திடுக் பின்னணி..!

TWO WHEELER, TWO WHEELER FANCY NUMBER, HIMACHAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்