ஜஸ்ட் மிஸ்! பெங்களூரில் மோத இருந்த இரு விமானங்கள்.. கடைசி நொடியில் எடுத்த முடிவு.. வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்திலிருந்து டேக் ஆஃப் ஆன இரு விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோத இருந்த நிலையில் பெரிய விபத்து நடக்காமல் தடுக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

மோத இருந்த இரு விமானங்கள்:

பெங்களூரு விமான நிலையத்திலிருந்து கடந்த ஜனவரி 9-ஆம் தேதி அன்று காலையில் வெறும் 5 நிமிட இடைவெளியில், இண்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் டேக் ஆஃப் ஆகியுள்ளன. பெங்களூருவில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்ட 6E455 என்ற விமானமும், பெங்களூருவில் இருந்து புவனேஸ்வருக்கு புறப்பட்ட 6E246 என்ற அந்த இரு விமானங்களும் டேக் ஆஃப் ஆன நிலையில் வானில் ஒன்றோடு ஒன்று மோத போயுள்ளன. ஆனால் இந்த மோதல் சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:

பெங்களூரு விமான நிலையத்தின் வான் மார்க்கத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து எந்த லாக் புத்தகத்திலும் பதிவு செய்யப்படவில்லை,. இது பற்றி விமான நிலைய ஆணையமும் தகவல் வெளியிடவில்லை. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் தலைவர் அருண் குமார் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு இந்த சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும், தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

breach of separation:

மோத இருந்த இந்த இரு விமானங்களும் 'breach of separation' என்ற தொழில்நுட்ப தவறை இழைத்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக தரப்பில் கூறியுள்ளனர். இரண்டு விமானங்கள் ஒரு வான்வெளியில் குறைந்தபட்ச கட்டாய செங்குத்து அல்லது கிடைமட்ட தூரத்தை கடக்கும்போது 'breach of separation' ஏற்படுகிறது. புறப்பட்ட பிறகு இரண்டு விமானங்களும் ஒன்றை மற்றொன்று மோதும் விதமாக சென்றுள்ளது.

எப்படி விபத்து தடுக்கப்பட்டது?

ஆனால் சரியான நேரத்தில் அப்ரோச் ரேடார் கன்ட்ரோலர் மூலம் திசையை திருப்பியதால் மட்டுமே நடுவானில் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது" என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சமீபத்தில் துபாய் விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோத இருந்த சம்பவம் வெளியான நிலையில் தற்போது மேலும் அதே போன்றதொரு சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PLANES, BANGALORE, AIRPORT, விமானங்கள், பெங்களூரு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்