கல்யாணம் நடக்க இந்த பரிகாரம் பண்ணனும்.. விபரீத காரியத்தை செய்ய சொன்ன மாந்திரீகவாதி.. திடுக்கிட வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமணம் நடக்க வேண்டி மாந்திரீகவாதியின் பேச்சை கேட்டு சிறுமியை நரபலி கொடுக்க கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பாத் மாவட்டத்தில் உள்ள சிஜார்சி கிராமத்தை சேர்ந்தவர் சோனு பால்மிகி. இவருக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்துள்ளது. அதனால் தனது நண்பர் நீத்து உடன் சேர்ந்து சதேந்திரா என்ற மாந்திரீகவாதி சந்தித்துள்ளனர். அப்போது அவர், திருமணம் நடக்க வேண்டும் என்றால் ஒரு மனித உயிரை நரபலி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனை நம்பிய சோனு தனது வீட்டிற்கு அருகில் வசித்து வரும் குடும்பத்தினரின் 7 வயது சிறுமியை கடத்தியுள்ளார். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் கடந்த 13-ம் தேதி தங்களது குழந்தையை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது சோனு மற்றும் நீத்து ஆகிய இருவரின் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனை அடுத்து இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போதும் மாந்திரீகவாதி பேச்சைக்கேட்டு சிறுமியை கடத்தியதாக அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும் ஹோலி பண்டிகை தினத்தன்று தான் சிறுமியை பலியிட வேண்டும் என மாந்திரீகவாதி கூறியதால், பாக்பாத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் சிறுமியை மறைத்து வைத்திருப்பதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து உடனடியாக அங்கு சென்ற போலீசார், சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

இதனை அடுத்து சோனு மற்றும் நீத்து ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும் மாந்திரீகவாதி சதேந்திரா உட்பட மூவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு சிறுமியை பத்திரமாக மீட்ட போலீஸ் குழுவுக்கு கமிஷனர் அலோக் சிங் ரூபாய் 5000 வெகுமதி அளித்து பாராட்டினார்.

POLICE, HUMAN SACRIFICE, KIDNAP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்