‘ஊருக்குள் புகுந்த ரெண்டு தலை நல்லபாம்பு’!.. ‘ஆச்சரியத்தில் உறைந்த கிராமம்’..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மேற்கு வங்கத்தில் இரண்டு தலையுடன் கூடிய நாகம் வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காள மாநிலம் மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள மிட்னாபூர் அருகே உள்ள கிராமத்தில் இரு தலைகள் உடைய நல்லபாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. உடனே இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், கிராம மக்களிடம் இருந்த பாம்பை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் இரு தலை உடைய நாகம் புராண நம்பிக்கையுடன் தொடர்புடையது எனக் கூறி பாம்பை தர மறுத்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த வனத்துறையின் ஊர்வன ஆராய்ச்சியாளர் ஒருவர், இது மனிதன் இரு தலைகள் அல்லது இரு கட்டைவிரல்களை கொண்டிருப்பது போன்ற உயிரியல் சார்ந்த பிரச்சனை. அதனால்தான் இந்த பாம்புக்கு இரண்டு தலைகள் உள்ளன. இதற்கும் புராண நம்பிக்கையும் தொடர்பு இல்லை. இவ்வகை பாம்புகளை காப்பகத்தில் வைப்பதன் மூலம் ஆயுட்காலத்தை அதிகரிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

WESTBENGAL, SNAKE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்