அதிகாரி கொடுத்த சிக்னல்.. ஒரே நேரத்துல டேக்-ஆஃப் ஆன 2 விமானங்கள்.. கொஞ்சநேரத்துல பரபரப்பான கண்ட்ரோல் ரூம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு இண்டிகோ விமானம் ஒன்று கிளம்பியிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | IPL 2022: பெரிய தலைங்களுக்கு இடம் இல்லை... தொடரின் சிறந்த அணி… சச்சின் XI-ல் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா

அதே நேரத்தில் புவனேஷ்வர் நகருக்கும் மற்றொரு விமானம் கிளம்பியுள்ளது. விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் மற்றொரு விமானம் கிளம்பியதை கவனிக்காமல் விமானத்திற்கு டேக்-ஆஃப் செய்ய அனுமதி கொடுத்ததாக தெரிகிறது. இதன் காரணமாக இரு விமானங்களும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய நிலையில் சென்றதால் பயணிகள் அச்சமடைந்தனர். ஜனவரி 7 ஆம் தேதி, நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுவந்த வேளையில் தற்போது அந்த அதிகாரிக்கு 3 மாத கால பணியிடை நீக்க உத்தரவை பிறப்பித்துள்ளது இந்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (DGCA)

விசாரணை

இதுகுறித்து DGCA.நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்," விமான நிலையத்தின் தெற்கு டவர் 6E 455 விமானம் கிளம்ப அனுமதி கொடுத்துள்ளது. அதே நேரத்தில், 6E 246 விமானம் கிளம்ப வடக்கு டவரிலிருந்து அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இரு விமானங்களும் நெருங்கிய வேளையில் உடனடியாக அவற்றை திசை திருப்ப அதிகாரிகள் அவசர உத்தரவை பிறப்பித்தனர்" என்று குறிப்பிட்டுள்ளது.

வழக்கமாக இப்படியான சூழ்நிலையில் இரு விமானங்களுக்கு இடையான தூரம் 1000 அடி இருக்கவேண்டும். ஆனால், இந்த விமானங்களுக்கு இடையே 100 அடி மட்டுமே இருந்திருந்திருக்கிறது. இதனால் இந்த விஷயம் "தீவிரமான சம்பவம்" என வகைப்படுத்தப்பட்டு, விமான விபத்து விசாரணைப் பணியகத்தால் (AAIB) விசாரிக்கப்பட்டது. மேலும், இதன் காரணமாக, டவரின் செயல்பாடுகளைக் கண்காணிக்காததற்கும், சம்பவத்தைப் புகாரளிக்காததற்கும் டவர் மேற்பார்வையாளருக்கு எச்சரிக்கைக் கடிதம் வழங்க முடிவு செய்துள்ளது DGCA.

பணியிடை நீக்கம்

இதனைத் தொடர்ந்து, ரன்-வே விதிமுறைகளை பின்பற்ற தவறியதாக வடக்கு டவர் கட்டுப்பாட்டு அதிகாரியின் உரிமத்தை 3 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்துள்ளது DGCA. அந்த அதிகாரி சம்பவம் நடந்தபோது வடக்கு டவரின் கட்டுப்பாட்டு அதிகாரியாகவும் பணியாற்றியதாக DGCA வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read | கொள்ளை நடந்த வீட்டில் கிடச்ச செல்போன்.. உள்ளே இருந்த போட்டோ.. சென்னையில் நடந்த துணிகரம்..!

FLIGHTS, TAKE OFF, அதிகாரி, விமானங்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்