'60 வயது மூதாட்டியை அலைக்கழித்ததால்... ரூ.70 லட்சம் நஷ்டஈடு செலுத்தும் 2 பெரு நிறுவனங்கள்'... 'நுகர்வோர் ஆணையம் அதிரடி!'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

60 வயது மூதாட்டியை தவிக்கவிட்ட விமான நிறுவனங்கள் மற்றும் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு, ரூ.70 லட்சம் நஷ்டஈடு தர நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த ஹர்ஷன் கவுர் (60) என்பவர், கடந்த 2018ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டார். அதன்படி, ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மூலம் அமெரிக்கா செல்லவும், மார்ச் மாதம் திரும்பி வருவதற்கும் டிக்கெட் முன்பதிவு செய்து அமெரிக்கா சென்றார். அப்போது, சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பிராங்பர்ட் வழியாக டில்லி வர வேண்டிய அவரை, லுப்தான்ஸா விமான நிறுவனம் தனது அலட்சிய போக்கால் டென்மார்க்கில் இறக்கிவிட்டு சென்றது. அங்குள்ள கோப்பனேகன் விமான நிலையத்தில் இருந்து டில்லிக்கு விமானம் வரும் என கூறியதால் அங்கேயே காத்திருந்தார்.

இந்நிலையில், முறையான விசா இன்றி டென்மார்க் நாட்டில் இறங்கியதால் சட்ட விரோத குற்றச்சாட்டில் ஹர்ஷன் கைது செய்யப்பட்டார். அன்றைய நாள் முழுவதும் சிறையில் இருந்த அவர் தனது மகனின் உதவியால், மறுநாள் காலை விடுவிக்கப்பட்டார். அதன் பின், லுப்தான்ஸா விமான நிறுவனம் சார்பில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்க டிக்கெட் வழங்கியது. அங்கிருந்து லண்டன் சென்று பின்னர் லண்டனிலிருந்து டில்லி வந்தடைந்தார். வயதான காலத்தில் இப்படி அலைக்கழித்தது, விமான நிறுவனத்தின் தவறால் சிறை சென்றது என ஹர்ஷன் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, நுகர்வோர் ஆணையத்திடம் அவர் புகார் அளித்தார். புகாரை விசாரித்த நீதிபதிகள், பயணத்தை வழிநடத்த ஹர்ஷனுக்கு தேவையான விசா வழங்காததால் அவருக்கு, லுப்தான்ஸா மற்றும் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் ரூ.64.5 லட்சமும், தனியார் டிராவல்ஸ் ரூ.5 லட்சமும், தவறுக்கு காரணமான மூன்று தரப்பினரும் சேர்ந்து கூடுதலாக ரூ.50 ஆயிரமும், மொத்தம் ரூ.70 லட்சம் நஷ்டஈடாக வழங்க உத்தரவிட்டனர்.

FLIGHT, CONSUMERCOURT, COMPENSATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்