‘நாங்க அடி வாங்குறதுக்கு இங்க வரல’!.. டிராக்டர் பேரணியில் வெடித்த வன்முறை.. 2 விவசாய சங்கங்கள் எடுத்த ‘பரபரப்பு’ முடிவு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாவேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய கிஷான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்பு குழு அறிவித்து உள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நேற்று குடியரசு தினத்தில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் மோதல் வெடித்தது. அப்போது போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டியடித்தனர்.
இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதன்காரணமாக டெல்லியில் பதற்றமான சூழல் உருவானது. இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 22 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய கிஷான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்பு குழு அறிவித்து உள்ளது.
இதுகுறித்து அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் சர்தார் வி.எம்.சிங் கூறியதாவது, ‘வேறு யாரோ வழிநடத்துதலுடன் ஒரு போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்து செல்ல முடியாது. அதனால் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு இந்த போராட்டத்தில் இருந்து இப்போதே விலகிக் கொள்கிறது. அதேவேளையில் எங்களுக்கு எம்.எஸ்.பி (MSP) உத்தரவாதம் கிடைக்கும் வரை எதிர்ப்பு தொடரும். ஆனால் எதிர்ப்பு வேறு வடிவத்தில் செல்லாது. மக்கள் உயிரை தியாகம் செய்யவோ அல்லது அடி வாங்கவோ நாங்கள் இங்கு வரவில்லை’ என அவர் கூறினார்.
அதேபோல் சில்லா எல்லையில் உள்ள பாரதிய கிசான் யூனியன் தலைவர் தாக்கூர் பானு பிரதாப் சிங், ‘எங்கள் 58 நாள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து நான் மிகுந்த வேதனையடைகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: ‘அவரை ஒன்னும் பண்ணாதீங்க’!.. போராட்ட களத்தில் ‘தனியாக’ சிக்கிய போலீஸ்.. தலைநகரை திரும்பி பார்க்க வச்ச மனிதம்..!
- ‘செங்கோட்டையில் பறந்த விவசாயிகள் கொடி’!.. தடையை மீறி டெல்லிக்குள் நுழைந்த டிராக்டர் பேரணி.. உச்சக்கட்ட பரபரப்பில் தலைநகர்..!
- 'UK-வில் புதிய வகை கொரோனா பரவி வரும் நிலையில், இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 266 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 5 பேருக்கு தொற்று உறுதி!'.. 'இன்று இரவு முதல் விமான சேவைகள் ரத்து!'
- இன்ஸ்டாகிராமில் அறிமுகம்.. ‘அக்கா’னு தான் கூப்பிடுவான்.. ஆனா இப்படி ஏமாத்துவான்னு கொஞ்சமும் எதிர்பாக்கல.. பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி..!
- 'பாரதியார் சிலை அப்படியே தான் இருக்கு...' 'ஆனா அதுல ஒண்ணு மட்டும் மிஸ்ஸிங்...' - கடும் அதிருப்தியில் மக்கள்...!
- எங்களுக்கு ‘மொய் பணம்’ வேண்டாம்.. மண்டபத்தில் ஒரு ‘பெட்டி’ வைத்த கல்யாண வீட்டார்.. குவியும் பாராட்டு..!
- ‘அய்யா உங்க சாப்பாடு வேண்டாம்’!.. உணவு இடைவேளையில் அதிகாரிகளை அதிரவைத்த விவசாயிகள்..!
- ‘நாங்க விவசாயிகளின் பிள்ளைங்க’!.. ‘இதுக்குமேல அத வச்சி என்ன பண்ண போறோம்’.. முன்னாள் விளையாட்டு வீரர்கள் எடுத்த ‘அதிரடி’ முடிவு..!
- 'யாரா இருந்தாலும் சரி...' - கனடா பிரதமரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த 'நடிகை' குஷ்பு!
- வைரல் ஆகும் ஃபோட்டோ.! ‘உண்மையில் இரண்டிலும் இருப்பவர் ஒரே பாட்டியா?’.. ‘பலவிதமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!’