'ரயிலில்' போலீசாரை பார்த்ததும் 'பதுங்கிய' இருவர்... 'கொரோனா' பாதிக்கப்பட்டவர்கள் என 'தெரிந்ததும்'... 'பதறிப்' போன 'பயணிகள்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா அறிகுறிகளுடன் தனிமை முகாமில் பாதுகாக்கப்பட்டவர்களில் இருவர் தப்பிச் சென்ற நிலையில் அவர்களை போலீசார் துரத்தி பிடித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை இந்தியாவில் 271 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் 3 பேரும், தெலங்கானாவில் 19 பேரும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் விகாராபாத் தனிமை முகாமில் அறிகுறிகளுடன் பலர் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாமிலிருந்து இருவர் திடீரென தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் தப்பிச் சென்ற இருவரும் ஆந்திராவின் காஜியாபாத் ரயில் நிலையத்தில் பிடிபட்டனர். அவர்கள் இருவரும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மூலம் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
ரயில் நிலையத்தில் அவர்கள் இருவரும் பிடிபட்ட நிலையில், அங்கிருந்தவர்களிடம் பதற்றம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர்கள் பயணித்த பெட்டி மற்றும் ரயில் நிலையத்தின் பிற இடங்கள் மருந்து தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இருவரும், ஆம்புலன்ஸ் மூலம் வாரங்காலில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இத்தாலியை' புரட்டிப் போட்ட 'கொரோனா'...பலி எண்ணிக்கையில் 'சீனாவை' 'மிஞ்சியது'...'உலகப் போரை' விட 'மோசமான' நிலை...
- என்ன ஒரு 'தீர்க்கதரிசனம்.!..' 'இன்னைக்கு' நடக்கிறத 'அப்படியே' எடுத்திருக்காரு...'ஹாலிவுட்டில்' ஒரு 'நாஸ்ட்ரடேமஸ்'...
- "வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லை...." "என்னை மீறி ஒரு வைரஸ் கூட உள்ள வர முடியாது..." 'கிம் ஜாங் உன்'னின் வேற லெவல் 'கன்ட்ரோல்'...
- 'தூக்கிலிட்டவருக்கும்' 'மனநல' ஆலோசனை... 4 'குற்றவாளிகளை' தூக்கிலிட.... 'பவன் ஜல்லாட்' வாங்கிய 'சம்பளம்' எவ்வளவு தெரியுமா?...
- "அடுத்த மாதத்தை நினைத்தால் கவலையளிக்கிறது..." முதலில் இப்படித்தான் 'மெதுவாக' 'பரவும்'... 'அமைச்சர்' வெளியிட்ட 'அதிர்ச்சி தகவல்'...
- நிர்பயா குற்றவாளிகளின் கடைசி 'திக் திக்' நிமிடங்கள்... திகார் சிறையில் அதிகாலையில் நடைபெற்றது என்ன?...
- "நள்ளிரவில் உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டுவேன்..." 'குற்றவாளிகளின்' வழக்கறிஞர் 'சவால்'... 'கடைசிநேர' வாதமும், போராட்டமும் 'தோல்வி'... நள்ளிரவு '2.30 மணிக்கு' 'மனு தள்ளுபடி'...
- '4 குற்றவாளிகளும்' 'தூக்கில்' போடப்பட்டனர்... 'கடைசிகட்ட' மனுக்கள் அடுத்தடுத்து 'நிராகரிப்பு'... '7 ஆண்டுகளுக்குப் பிறகு நிர்பயாவுக்கு' 'நீதி' கிடைத்ததாக தாயார் உருக்கம்...
- 'கொரோனாவுக்கெல்லாம்' தாத்தா 'ஸ்பானிஷ் ஃபுளூ'... அந்த காலத்தில் 'கோடிக்கணக்கில்' இறந்திருக்கிறார்கள்... அதையே இந்த உலகம் 'சாமாளித்து' விட்டது...
- 'தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ்...' 'மூன்றாவது நபருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது...' அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் அறிவிப்பு...!