என் தம்பிய பாத்து 74 வருஷம் ஆச்சு.. கட்டித் தழுவிய சகோதரர்கள்.. கண் கலங்க வைத்த வீடியோ!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பஞ்சாப் : சுமார் 74 ஆண்டுகளுக்கு பிறகு, சந்தித்துக் கொண்ட சகோதரர்களின் நெகிழ்ச்சி மிக்க வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

ஆயிரக்கணக்கில் உயிர் தியாகம், எக்கச்சக்க போராட்டங்கள் என பல கடினமான நிகழ்வுகளின் இறுதியில் தான், இந்தியாவிற்கு கடந்த 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது.

பல ஆண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்த இந்திய மக்கள், கிடைத்த சுதந்திரத்தினை வெகுவாக கொண்டாடித் தீர்த்தார்கள். அதே வேளையில், இந்தியா பாகிஸ்தான் என பிரிவினை உருவாகி, இரு நாடாக பிரியவும் செய்தது.

பிரிந்த குடும்பங்கள்

இதன் காரணமாக, உறவினர்களாகவும், குடும்பங்களாகவும் வாழ்ந்து வாந்தி மக்கள், இரு நாடுகளிலுமாக பிரிந்து கொண்டனர். அது மட்டுமில்லாமல், சில குடும்பங்களின் உடன்பிறப்புகள் கூட, ஒருவருக்கு ஒருவர் வெவ்வேறு நாடுகளில் பிரிந்து வாழ்ந்தனர்.

பொது இடத்தில் மாஸ்க் அணியவில்லையா? அதிகரிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை..!

74 ஆண்டுகள் பிரிவு

அப்படி, இந்தியாவில் ஒருவர், பாகிஸ்தானில் ஒருவர் என கடந்த 74 ஆண்டுகளுக்கு முன், இரு வேறு நாடுகளில் பிரிந்து சென்ற சகோதரர்கள், கிட்டத்தட்ட 74 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக சந்தித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. 80 வயதான முகமது சித்திக் என்பவர், பாகிஸ்தானின் பைசலாபாத் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார்.

அவரது சகோதரரான ஹபீப் என்பவர், தனது குடும்பத்தினருடன் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் வாழந்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகிறது. இந்நிலையில், சகோதரர்களான சித்திக் மற்றும் ஹபீப் ஆகியோர், கர்தார்பூர் பகுதியிலுள்ள குருத்வாரா சர்தார் சாஹிப் புனித தலத்தில் சந்தித்துக் கொண்டனர்.

பெரும் பரபரப்பு! ஹைஜாக் ஆன கப்பலில் இந்தியர்கள்!! இந்திய‌ அரசு வைத்த கோரிக்கை!!

கட்டித் தழுவி கண்ணீர்

74 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் சந்தித்துக் கொண்டதால், ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு, உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட்டனர். 74 ஆண்டு கால பிரிவும், வேதனையும் அவர்களை உணர்ச்சி வசப்பட செய்தது. இருவரின் செயலால், அங்கிருந்தவர்களும் கலங்கித் தான் போயிருப்பார்கள்.

வைரலாகும் வீடியோ

தங்களை மீண்டும் இணையச் செய்ததற்காக, சகோதரர்கள், தங்களின் அரசுக்கு நன்றிகளையும் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோக்களும், தற்போது இணையதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. பஞ்சாபை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லையில், குருத்வாரா சர்தார் சாஹிப் புனித தலம் அமைந்துள்ளது.

இந்தியாவில் இருந்து, சர்தார் சாஹிப் புனித தலத்தை பார்வையிட, சர்வதேச சாலை வழித்தடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதே போல, இந்த சமயத்தில் சீக்கிய பக்தர்கள், அங்கு விசா இல்லாமல் கூட செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

BROTHERS, PARTITION, REUNITE, REUNITE AFTER 74 YEARS, சகோதரர்கள், பஞ்சாப்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்