'இந்தியாவுக்கு கொரோனா நிதியை வாரி வழங்கிய ட்விட்டர் CEO'... 'ஆனால் அந்த நிதி யாருக்கு'... ட்விஸ்ட் வைத்த ஜேக் ஃபேட்ரிக்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.110 கோடி ரூபாயை ட்விட்டர் நிறுவனம் கொடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாகத் தினசரியாக இந்தியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினசரி பலி எண்ணிக்கையும் 3 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது.

நாட்டின் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு நிலவுவதால் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறாத சூழலும் ஏற்பட்டது. இந்த நிலையில் உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு தங்களால் இயன்ற உதவிகளை மருத்துவப் பொருளாகவும், நிதியாகவும் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் ஃபேட்ரிக் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடும் இந்தியாவுக்கு உதவ சுமார் ரூ.110 கோடியை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நிதியானது கேர் (CARE), எய்டு இந்தியா (AID INDIA), சேவா (sewa) ஆகிய மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்