ஒரே நாளில் கல்யாணம் முடித்து... ஒரே நாளில் தாய் ஆன இரட்டைச் சகோதரிகள்..! வியக்க வைக்கும் அதிசயம்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் ஒரே நாளில் திருமணம் முடித்து தற்போது ஒரே நாளில் குழந்தைகளை பிரசவித்து உள்ளனர்.

ஒரே நாளில் கல்யாணம் முடித்து... ஒரே நாளில் தாய் ஆன இரட்டைச் சகோதரிகள்..! வியக்க வைக்கும் அதிசயம்
Advertising
>
Advertising

கேரளாவைச் சேர்ந்த சந்திரசேகரன் - அம்பிகா தம்பதியருக்குக் கடந்த 1995-ம் ஆண்டு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். இரட்டைச் சகோதரிகள் ஶ்ரீப்ரியா, ஶ்ரீலட்சுமி. இவர்கள் இருவரும் இரட்டையர்களாகப் பிறந்த வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் ஒரே நேரத்தில் கடந்து வருகின்றனர். இதனால் இருவரும் ஒரே நாளில் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர்.

twin sisters gets married and begets children on the same day

இரட்டைச் சகோதரிகள் தங்கள் பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் ஒரே கல்லூரியிலேயே படித்துள்ளனர். இருவரும் ஒரே பாடப்பிரிவாக வணிகவியல் படிப்பை படித்து பட்டம் பெற்றுள்ளனர். தங்களது வாழ்வில் அனைத்துமே ஒரே மாதிரியாக நடப்பதால் திருமணத்தையும் இருவரும் ஒரே நாளில் செய்துகொள்ள திட்டமிட்டனர்.

இதன் அடிப்படையில் சகோதரிகள் ஶ்ரீலட்சுமி மற்றும் ஶ்ரீப்ரியா ஆகியோரது திருமணம் ஒரே நாளில் நடந்தது. ஆனால், இதுவரையில் சகோதரிகள் ஒரே மாதிரியாக நடக்கத் திட்டமிட்டனர். ஆனால், இருவருக்கும் ஒரே நாளில் பிரசவம் என்பது இயற்கையே திட்டமிட்டதாக இந்தச் சகோதரிகள் கூறுகின்றனர். ஶ்ரீப்ரியா- ஶ்ரீலட்சுமி பிறந்த அதே திருவனந்தபுரம் கரிதாஸ் மருத்துவமனையிலேயே இந்த இரட்டைச் சகோதரிகளுக்கும் பிரசவம் நடந்துள்ளது.

இருவருக்குமே பெண் குழந்தைகள் தான் பிறந்துள்ளன. ஶ்ரீப்ரியாவுக்கு மதியம் 02.20 மணிக்கும் அதே நாளில் மாலை 06.43-க்கு ஶ்ரீலட்சுமிக்கும் பெண் குழந்தைகள் பிறந்தன. இதில் அதிசயம் என்னவென்றால் சகோதரிகளைப் போலவே அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளின் ரத்தப் பிரிவும் ஒன்று தானாம். தங்களைப் போலவே தங்கள் குழந்தைகளும் ஒற்றுமையாகப் பாசத்துடன் வளர வேண்டும் என ஆசைப்படுவதாக இந்த இரட்டைச் சகோதரிகள் தெரிவித்துள்ளனர்.

KERALA, TWIN SISTERS, TWINS, இரட்டைச் சகோதரிகள், கேரளா, அதிசய இரட்டையர்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்