'கொத்து கொத்தாக' விழுந்து இறந்த பசுக்கள்'...தீவனத்துல என்ன இருந்துச்சு?... அதிரவைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மாட்டு தொழுவத்தில் இருந்த  22 பசுக்கள் அடுத்தடுத்து சரிந்து விழுந்து இறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப் பிரதேசம் மாநிலம் பதாவுன் பகுதியில் அமைந்துள்ள கோ சாலை ஒன்றில் 70க்கும் மேற்பட்ட பசுக்கள் வளர்க்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் வழக்கம் போன்று பசுக்களுக்கு தீவனம் போடப்பட்டு ஓய்விற்காக அவை கட்டப்பட்டன. சிறிது நேரத்தில் அங்கிருந்த பசுக்கள் எல்லாம் வரிசையாக சரிந்து விழுந்து உயிரிழந்தன. இது அங்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது.

இதற்கிடையே அங்கிருந்த ஊழியர்கள் கோ சாலை நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ குழுவினர், மீதமிருந்த 50க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். மேலும் பசுக்களின் தீவனம், தண்ணீர் ஆகியவற்றை சோதனை செய்தனர். உயிரிழந்த பசுக்களுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.

அதில் பசுக்கள் இரையாக உண்ட கம்பு இலைகளில் நைட்ரஜன் அளவுக்கு அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக நைட்ரேட் நஞ்சு தாக்கப்பட்டு பசுக்கள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் அடுத்தகட்ட சில ஆய்வுகளை மருத்துவ குழுவினர் செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் உத்திரப் பிரதேச மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UTTARPRADESH, KACHHLA, COW, BUDAUN DISTRICT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்