'டிக்டாக் வாலிபருடன் காதலில் விழுந்த சீரியல் நடிகை'.. 'குளியலறையில் பெற்றோர் கண்ட உறையவைத்த காட்சி!'.. நடந்தது என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டிக்டாக்கில் அறிமுகமான நண்பர் ஒருவர் தகாத முறையில் வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படும் நிலையில் டிவி சீரியல் நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர வைத்துள்ளது.

மனசு மமதா, மௌனராகம் உள்ளிட்ட சில தெலுங்கு சின்னத்திரை தொடர்களில் நடித்தவர் ஸ்ராவனி. இவர் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு குளியலறையில் தற்கொலை செய்துகொண்டார். இவருடைய சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பின்னர் காவல் நடத்திய விசாரணையில் டிக்டாக்கில் ஆடல் பாடல் என பிரபலமாக வலம் வந்த காக்கிநாடா சன்னி என்கிற தேவராஜ் ரெட்டி என்பவரை ஸ்ராவனி காதலித்து வந்தது தெரியவந்தது.

ஆனால் பின்னர் இருவரும் தனிமையில் இருப்பதை ஆபாசமாக வீடியோ எடுத்த சன்னி தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக ஸ்ராவனியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் எனக்கூறி ஸ்ராவனி பணம் கேட்டு பல மாதங்களாக மிரட்டி வந்ததாகவும் ஒரு லட்ச ரூபாயை பெற்றுக் கொண்ட நிலையில் மேற்கொண்டு பணம் கொடுக்க இயலாத காரணத்தால் இத்தகைய தற்கொலை முடிவை ஸ்ராவனி  எடுத்ததாகவும் அவருடைய பெற்றோர் தெரிவித்துள்ளனர். ஸ்ராவனியின் சகோதரர் சிவாவும் தனது சகோதரி மரணத்திற்கு காரணமான சன்னி என்கிற தேவராஜ் ரெட்டி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சன்னி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தானும் நடிகை ஸ்ராவனியும் காதலித்தது உண்மைதான், ஆனால் இரண்டு வருடமாக அவருடன் தொடர்பில் இல்லை என்றும், அத்துடன் கடந்த 7ஆம் தேதி ஸ்ராவனி தனக்கு ஒரு ஆடியோ அனுப்பியதாகவும் , அந்த ஆடியோவில் தனது தற்கொலைக்கு தனது பெற்றோரும், சாய் என்பவரும்தான் காரணம் என்றும் தெரிவித்துள்ளதாகக் கூறி அந்த ஆடியோவையும் சன்னி வெளியிட்டுள்ளார். இருதரப்பு புகார்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்