"ஒருவழியா கெடச்சுருச்சு".. தொலைஞ்சு போன TTF வாசன் பைக்.. பல போராட்டத்துக்கு அப்புறம் கெடச்சது எப்படி?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பைக் கிடைக்கவில்லை என்பதால் வேதனையில் TTF வாசன் இருந்து வந்த நிலையில், ஒரு வழியாக கைக்கு பைக் வந்துள்ளதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | ராணுவ சீருடையில் 4 மாதங்கள் வேலை பார்த்த பிறகு.. இளைஞருக்கு தெரிய வந்த அதிர்ச்சி!!.. பணத்தையும் இழந்த பரிதாபம்..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் TTF வாசன். இவர் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர். தனது யூடியூப் பக்கத்தில் விலை உயர்ந்த தனது பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்து இது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருவதால், பைக்கில் பயணம் செய்ய விரும்பும் பலரும் இவரை பின்பற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், பல லட்சம் மதிப்புள்ள பைக் காணாமல் போனதாக TTF வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் உள்ள தகவலின் படி, தனது நண்பர் ஒருவருடன் சமீபத்தில் லடாக் சென்றுள்ளார் TTF வாசன். கவாசகி இசட் 900 என்ற பைக்கில் சென்ற அவர், ட்ராஸ் என்னும் பகுதியை கடந்து செல்ல முயன்றதாக தெரிகிறது. ஆனால், அப்பகுதியில் பைக்கில் செல்ல அனுமதி இல்லை என்பதால், தனது ஹோட்டல் அறையில் இருந்த ஒருவரின் உதவியோடு தனது பைக்கை ட்ரக் ஏற்றியும் அனுப்பி வைத்துள்ளார் வாசன்.

இதனைத் தொடர்ந்து, கார் ஒன்றின் மூலம் வாசனும் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவது ஆளாக TTF வாசன் போய் சேர பைக் அங்கே வந்து சேரவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து, ட்ரக் ஓட்டுனருக்கு அழைத்த போது ஒன்றிரண்டு நாட்களில் வந்து விடும் என்றும் ஓட்டுநர் சொல்ல, பின்னர் தொடர்பு கொண்ட போது அவர் போன் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து பலமுறை முயற்சித்தும் எந்த பதிலும் இல்லை என்றும் தெரிகிறது.

பைக் ஏற்றிக் கொண்டு வந்த ட்ரக்கில் இருந்து எந்த பதிலும் வராத காரணத்தினால் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் TTF வாசன். பைக்கை காணவில்லை என்றும், அது விரைவில் கிடைக்க Pray செய்யுங்கள் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் TTF வாசன் பைக் தற்போது கிடைத்துள்ளதாக மிகவும் மகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக ட்ரக் ஓட்டி வந்த நபருக்கு அழைத்த போது போன் கிடைக்கவில்லை என்றும் ஒரு சில முறை அவர் எடுக்கவில்லை என்றும் TTF வாசன் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது பைக் கைக்கு வந்த பிறகு தான் என்ன நடந்தது என்பது குறித்து சில விவரங்கள் தெரிய வந்துள்ளதாகவும் வாசன் தெரிவித்துள்ளார். அதன்படி TTF வாசனின் பைக் ஏற்றி வந்த ட்ரக்கில் அதே போல வேறு சில பொருட்களையும் கொண்டு சேர்க்க வேண்டி இருந்ததாகவும், அவற்றை ஒவ்வொரு இடமாக இறக்கிவிட்டு TTF வாசன் இருந்த இடத்திற்கு வந்து சேர நேரம் எடுத்துக் கொண்டதும் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. அதேபோல அந்த ட்ரக் பயணம் செய்து வந்த வழியில் சரியாக சிக்னல் இல்லாததன் காரணத்தினால் அந்த வண்டியின் ஓட்டுனருக்கு தொலைபேசியில் அழைப்பு கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது.

மீண்டும் பைக்கை ட்ரக்கில் பார்த்ததும் வேறு ஏதாவது ஆகி விட்டதா என்ற அக்கறையிலும் பார்த்த படி வண்டியை கீழே இறக்கி இருந்தார் TTF வாசன்.

Also Read | "அடங்கி போணும்ன்னு அவசியமில்ல".. "அது என் விருப்பம்".. அமுதவாணன் கிட்ட முகத்துக்கு நேரா சொன்ன ஜனனி.. வைரல் சம்பவம்!!

TTF, TTF VASAN, BIKE, LADAKH TRIP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்