'இந்தியாவில் ட்ரம்ப்!'... 'கையெழுத்தாகும் புதிய ஒப்பந்தங்கள் என்னென்ன?'... சிறப்பு தொகுப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே வணிகம், விண்வெளி உள்ளிட்ட பல துறைகளின் கீழ் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு முறை பயணமாக தனது மனைவியுடன் இந்தியா வந்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் அவர் உரையாற்ற உள்ளார். அதன் பின், சபர்மதி ஆசிரமம், தாஜ்மஹால் ஆகிய இடங்களுக்கும் அவர் செல்கிறார்.

இந்நிலையில், ட்ரம்ப் வருகையின் போது இரு நாடுகளுக்கு இடையே சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிவுசார் சொத்துரிமை, வணிக வசதியை மேம்படுத்துதல், உள்நாட்டு பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Picture Credit: NDTV 

NARENDRAMODI, TRUMP, INDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்