'உலகின்' மிகப்பெரிய 'மோடெரா' 'கிரிக்கெட் மைதானம்'... 'வாழ்வில்' ஒரு முறையாவது இங்கு 'மேட்ச்' பார்த்துவிட வேண்டும்... "எங்கிருக்கிறது தெரியுமா?"

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலகின் மிகப்பெரிய மொடெரா (Motera) கிரிக்கெட் மைதானம் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை வரும் 24ம் தேதி அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைக்கப்பட்டு வரும் மொடெரா கிரிக்கெட்மைதானம் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பிரம்மாண்ட இருக்கை வசதி கொண்டது.

தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள மைதானமே உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உள்ளது. இந்த மைதானத்தை விட பிரம்மாண்டமான மைதானமாக மொடெரா உருவாக்கப்பட்டு வருகிறது.

இதில் மொத்தம் 11 ஆடுகளங்கள் அமைக்கப்படுகின்றன. மழை பெய்தால் 30 நிமிடத்திற்குள் தண்ணீர் வெளியேறும் வகையில் நவீன வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதி நவீன மின்விளக்குகள், அதிக இடவசதி கொண்ட வாகன நிறுத்துமிடம் என முற்றிலும் அதிநவீன வசதிகளுடன் இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப், அவரது மனைவியுடன் இணைந்து இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிப்ரவரி 24, 25-ம் தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். இரண்டு நாள்களும் குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவுள்ளார்.

அப்போது, அஹமதபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மொடெரா கிரிக்கெட் மைதானத்தை அவர் திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LARGEST GROUND, CRICKET GROUND, TRUMP, MODI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்